Tamil Cinema News | சினிமா செய்திகள்
இணையத்தில் வைரலாகும் கபூர் சகோதரிகளின் சேட்டை..
தாய் ஸ்ரீதேவியின் தவிர்க்க முடியாத இழப்பிற்கு பிறகு முதன்முறையாக சேட்டை செய்யும் கபூர் சகோதரிகளின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. பழம்பெரும் நடிகையான ஸ்ரீதேவிக்கு ஜான்வி மற்றும் குஷி ஆகிய இருமகள்கள் இருக்கிறார்கள். தாயாக ஸ்ரீதேவி மிகவும் கண்டிப்பானவர். பல சமயங்களில், குஷிக்கு நல்லது, கெட்டது தெரியும்.
அவளை குறித்து கவலை இல்லை. ஆனால், ஜான்விக்கு நான் இல்லாமல் வேலை நடக்காது. எல்லாமே என்னை சார்ந்தே இருப்பாள் என அடிக்கடி ஸ்ரீதேவி மகள்கள் குறித்து ஊடகத்தில் பகிர்ந்து கொண்ட கருத்து தான் இது. அதை நிரூபிக்கும் விதமாக, ஸ்ரீதேவி இறப்பு ஜான்வியை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டது. மீடியா வெளிச்சத்தில் கூட சிரிப்பை மறந்தார் ஜான்வி.
பாலிவுட்டில் வெளியாக இருக்கும் தனது முதல் படமாக தடக் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அவரின் பதிவுகள் கூட ஸ்ரீதேவியை அவர் அதிகம் மிஸ் செய்வதையே காட்டியது. ஏறத்தாழ இரண்டு மாதங்களை தாண்டியும் ஜான்வி சற்று கவலையில் இருப்பதாகவே தகவல்கள் வெளியாகியது. ஆனால், இரண்டாவது மகள் குஷி உண்மையை சற்று ஏற்று கொண்டுவிட்டார். அக்கா ஜான்வியை சரி செய்யும் பணியிலும் இறங்கி விட்டதாக தெரிகிறது.

kapoor
இந்நிலையில், அவரை தன் தங்கை குஷி கபூர் உப்பு மூட்டை தூக்கியபடி இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும், இப்புகைப்படத்தை கிளிக் செய்து வெளியிட்டு இருப்பவர் போனி கபூரின் முதல் மனைவியின் மகள் அஷ்துலா கபூர். முன்னதாக, ஸ்ரீதேவியுடனான திருமணத்தால் தாயை இழந்து தந்தையுடன் போனி கபூரும், அஷ்துலா கபூரும் ஒட்டாமல் இருந்தனர்.
ஆனால், தங்களை போலவே குஷியும், ஜான்வியும் தாயை இழந்ததால் கஷ்டப்பட கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். ஸ்ரீதேவி மறைவுக்கு பிறகு எந்த அழைப்பையும் எதிர்பார்க்காமல் ஜான்வியை சந்தித்த அஷ்துலா, அவருக்கு பக்க துணையாக இருந்தார். தன் தங்கை ஜான்வியை பற்றி தவறாக செய்தி வெளியிட்ட இணையத்தளத்தை திட்டவே செய்தார் அர்ஜூன் கபூர். தற்போது, ஜான்வி, குஷி, அஷ்துலா மற்றும் அர்ஜூனுடன் ஒரே வீட்டில் போனி வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
