Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தீபிகா படுகோனே இடத்தை பிடித்த ஜான்வி கபூர்.. ஆச்சரியத்தில் பாலிவுட்

மறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் அடுத்த படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் தனது திறமையை காட்டி வந்தார். கடைசியாக, பாலிவுட்டில் அவர் நடிப்பில் வெளியான மாம் படத்திற்கு சமீபத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த விருதை வாங்க ஸ்ரீதேவி உயிருடன் இல்லை. ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள துபாய் சென்றவர் அங்கிருந்த குளியலறை தொட்டியில் தவறி விழுந்து இறந்தார். இது கபூர் குடும்பத்தை கடுமையாக பாதித்தது. அவரின் மூத்த மகள் ஜான்வி கபூர், அம்மாவுடன் ரொம்ப பற்றாக இருப்பவர். பாலிவுட்டில் தடக் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாக இருக்கும் ஜான்வி, படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அம்மா இல்லையே என அழுதது அனைவருக்கும் உருக்கமாக அமைந்தது.

சாய்ரட் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற மராத்தி படத்தின் இந்தி ரீமேக்காக தான் தடக் உருவாகி இருக்கிறது. ஜான்வி கபூருடன், இஷான் கட்டார் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை கரண் ஜோஹர் தயாரிக்கிறார். ’ஹம்டி சர்மா கி துல்ஹனியா’, `பத்ரிநாத் கி துல்ஹனியா’ ஆகிய படங்களை இயக்கிய ஷஷாங்க் இப்படத்தை இயக்கியிருக்கிறார். வரும் ஜூலை மாதத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

இந்நிலையில், ஜான்வி கபூரின் அடுத்த படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான பன்சாலி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பத்மாவத் படத்திற்கு ஏகத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால், அதையெல்லாம் படத்தின் ரிலீஸ் அடித்து நொறுக்கி இருக்கிறது. பாலிவுட்டில் சினிமாவிலேயே இப்படம் பெரும் ஹிட் அடித்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு இயக்குனரின் படத்தில் ஜான்வி நடித்தால் அவருக்கு அது பெரிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top