fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கார்கில் மங்கையாக பயோபிக்கில் ஸ்ரீதேவி மகள் – லைக்ஸ் குவிக்குது போஸ்டர்ஸ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கார்கில் மங்கையாக பயோபிக்கில் ஸ்ரீதேவி மகள் – லைக்ஸ் குவிக்குது போஸ்டர்ஸ்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். சுமாரான ஒபெநிங் ஆக தான் அமைந்தது இப்படம். இவர் அடுத்த படம் விஜய் தேவரகொண்டா உடன் நடிப்பதாக செய்திகள் பரவியது, பின்னர் தென்னிந்திய மொழியில் அறிமுகம் என்றனர். எனினும் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியாக வில்லை.

குஞ்சன் சக்சேனா – தி கார்கில் கேர்ள்

சுமார் 20 வருடங்களுக்கு முன் கார்கில் யுத்த சமயத்தில், குஞ்சன் சக்சேனா என்பவர் தான் முதல் பெண்மணியாக நமது இந்தியன் விமானப்படை சார்பில் போர்க்கள பகுதியில் பைலட் ஆக பயணித்தவர். அவரின் பயோபிக் தான் இப்படம்.

Gunjan Saxena poster

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். ஜானவி கபூர் தான் ஹீரோயின் ரோலில் நடிக்கிறார். பங்கஜ் திரிபாதி, அனங்க பேடி, வினீத் சிங், மனாவ் விஜ் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். இப்படத்தை சரண் சர்மா என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் 13 மார்ச் 2020 இல் ரிலீசாகிறதாம்.

Gunjan Saxena poster

குஞ்சன் சக்சேனா அவரின் அப்பா மற்றும் அண்ணன் இருவருமே ராணுவத்தை சேர்ந்தவர்கள் தான். 1994 இல் முதல் பெண்கள் பாட்ச் IAF ட்ரைனி பைலட் ஆனார். 1999 இல் கார்கில் யுத்த நேரத்தில் தன் உடன் இருக்கும் சக பைலட் ஸ்ரீவிசய ராஜன் மற்றும் இவர் இணைந்து மருத்துவ உதவி, பொருட்கள் கொடுப்பது அதே சமயத்தில் எதிரிகள் நடமாட்டத்தையும் கண்காணித்து தகவல் கொடுத்தனர்.

Gunjan Saxena poster

கட்டாயம் இப்படம் பெண்களின் தியாகத்தை, நம் கண் முன் கொண்டு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top