செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

நமத்து போன ஜெயம் ரவி பிரதரால் கிருத்திகா உதயநிதிக்கு வந்த ஆபத்து.. முட்டிக் கொள்ளும் ஐசரி கணேசின் வேல்ஸ் நிறுவனம்

தனி ஒருவன், மிருதன், டிக் டிக் டிக், அடங்கமறு என ஒரு காலத்தில் செம பீக்கில் இருந்தார் ஜெயம் ரவி. 15 கோடிகள் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். ஒரு படத்திற்கு ரவியின் தியேட்டர் மற்றும் வியாபார விநியோகம் சம்பந்தப்பட்ட பங்கு மட்டும் 15 கோடிகளில் இருந்தது.

மலை போல் போய்க் கொண்டிருந்த ஜெயம் ரவியின் கேரியர் இன்று மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. படத்திற்கு இரண்டு கோடிகள் அவருக்கு சம்பளம் கொடுப்பதற்கு கூட யாரும் முன்வரவில்லை. ஆனால் அவரோ 8 முதல் 10 என சம்பளம் கேட்டு வருகிறார். இதனால் அவர் பக்கம் தயாரிப்பாளர்கள் தலை வைத்து கூட படுப்பதில்லை.

சமீபத்தில் தீபாவளி தினத்தன்று வெளிவந்த பிரதர் படம் அவருக்கு மரண அடியை கொடுத்தது. தயாரிப்பாளர், விநியோகஸ்தகர்கள் என அனைவருக்கும் இந்த படம் பெரிய தலைவலி கொடுத்து நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் ஜெயம் ரவியின் படத்திற்கு சிக்கலாய் வந்து நிற்கிறது.

ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி முதன் முதலாக ஜெயம் ரவியை வைத்து இயக்கியுள்ள படம் “காதலிக்க நேரமில்லை”. கிருத்திகா இந்த படத்தை டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் ஜெயம் ரவியின் பிரதர் படத்தால் பிசினஸில் ஏமாற்றம் அடைந்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து ஐசரி கணேசனின் வேல்ஸ் நிறுவனம் “ஜீனி” என்றொரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கும் ஜெயம் ரவி நடித்த பிரதர் படம் பெரிய சிக்கலை உருவாக்கியுள்ளது. வேல்ஸ் நிறுவனம், கிருத்திகா உதயநிதியின் காதலிக்க நேரமில்லை படத்தை நம்பி இருந்தது. ஆனால் பிரதர் படம் எல்லாத்துக்கும் செக் வைத்துள்ளது. கிருத்திகா படமும் ஓடவில்லை என்றால் வேல்ஸ் நிறுவனம் அதல பாதாளத்துக்கு சென்று விடும்.

- Advertisement -

Trending News