புதன்கிழமை, நவம்பர் 6, 2024

மும்பை போன ராசியால் துருவனுக்கு அடித்த ஜாக்பாட்.. ஜெயம் ரவி காட்டில் கொட்டும் அடைமழை

அடங்கமறு, கோமாளி படத்திற்கு பிறகு ஜெயம் ரவி ஹிட் கொடுத்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. இந்த இரண்டு படங்களும் 2019 ஆம் ஆண்டு வெளிவந்தது. 2022ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் ஓடினாலும் கூட அதில் இவர் சோலோ ஹீரோவாக ஜெயிக்கவில்லை.

அடுத்தடுத்து பூமி, அகிலன், இறைவன் சைரன் என தொடர்ந்து இவருக்கு பெயிலியர் படங்களாக அமைந்தது. இதனால் சினிமா கேரியரில் இவருக்கு பெரிய தொய்வு விழுந்தது. இப்பொழுது இவர் நடிப்பில் உருவாகிய பிரதர் படம் தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளது. இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார்கள் ஜெயம் ரவி.

இப்பொழுது அவரது குடும்ப வாழ்க்கை பிரச்சனையில் உள்ளது. இதற்கிடையில் மும்பையில் தங்கி இருக்கிறார் ஜெயம் ரவி. அவரது நண்பர்கள் அவருக்கு தனியாக ஒரு வீடு பார்த்து மும்பையில் குடி வைத்திருக்கின்றனர். பிரச்சனைகள் மற்றும் மனக்குழப்பம் தீரும் வரை அங்கேயே இருக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.

ஜெயம் ரவி காட்டில் கொட்டும் அடைமழை

தற்சமயம் ஜெயம் ரவி வரிசையாக மூன்று படங்கள் கமிட்டாக இருக்கிறார். ரெட்ட தல மற்றும் டிமான்டி காலனி படத்தை எடுத்த தயாரிப்பு நிறுவனம் இப்பொழுது ஜெயம் ரவியை வைத்து வரிசையாக இரண்டு படங்கள் தயாரிக்கவிருக்கிறது.ஷங்கரின் அசிஸ்டன்ட் அருள் சக்தி முருகன் மற்றும் பாக்யராஜ் கண்ணன் என இரண்டு இயக்குனர்களும் இவரது படத்தை அடுத்தடுத்து இயக்குகிறார்கள்.

மும்பை சென்ற பின் ஜெயம் ரவி ஹிந்தி படங்களில் கமிட்டாவார் என்று பார்த்தால் வரிசையாக தமிழ் படங்களில் புக்காகி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு சைரன் படம் வெளிவந்தது. அதன் பிறகு ஒன்றரை வருடம் கழித்து இப்பொழுதுதான் பிரதர் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

- Advertisement -spot_img

Trending News