ஜெயம் ரவிக்கு அழுத்தத்தை கொடுத்த 3 விஷயங்கள்.. தனி ஒருவனை காதல் படுத்திய பாடு

2019 கோமாளி படத்துக்கு பின் ஜெயம் ரவிக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த படமும் கை கொடுக்கவில்லை. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார் ஜெயம் ரவி. தன்னுடைய மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்த அடங்கமறு, பூமி சைரன் போன்ற படங்களில் நடித்துள்ளார் ஜெயம் ரவி.

ஒரு பக்கம் சினிமா கேரியர் டல் அடித்தாலும் அவரின் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போனது. அவரது மனைவி ஆர்த்தி பிரபல சினிமா தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள். ஜெயம் ரவிக்கு இரண்டு மகன்கள். அதில் ஒருவர் டிக் டிக் படத்தில் நடித்தார்.

இப்பொழுது ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவரும் விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துவிட்டனர். இதற்கு முக்கிய காரணம் ஜெயம் ரவி கடந்த சில மாதங்களாக தன் மனைவி ஆர்த்தியால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

தனி ஒருவனை காதல் படுத்திய பாடு

ஆர்த்தி ஒரு நாளைக்கு ஒரு லட்சம் செலவு செய்வாராம், ஏற்கனவே அவர் பெரிய இடத்து பெண். அதுமட்டுமின்றி ஜெயம் ரவி மீது ஓவர் சந்தேகமும் பட்டுள்ளார். ஏற்கனவே ஜெயம் ரவி வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார் என்ற நோக்கத்தில் பார்க்கப்படுகிறாராம். இந்த மூன்று காரணங்களாலும் ஜெயம் ரவி சங்கடத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் பாடகி கெனிஷா பிரான்சிஸ் நட்பு கிடைக்கவே அவருடன் கோவாவிற்கு பறந்து விட்டார். அங்கே தான் கடந்த மூன்று மாதமாக இருந்துள்ளார். வீட்டிலிருந்து போன் பண்ணினால் அதை எடுப்பதும் கிடையாதாம். இதுதான் இவர்களுடைய விவாகரத்துக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News