பாரதிராஜா படத்தில் நடிக்க மறுத்த ஜெயலலிதா.. புது ஹீரோயினை வைத்து ஹிட்கொடுத்த சம்பவம்

16 வயதினிலே என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ்த் திரையுலகில் நுழைந்தவர் பாரதிராஜா. ரஜினி, கமல் இருவரையும் வைத்து எடுத்த அந்த திரைப்படம் தாறுமாறாக ஹிட்டானது. அதிலும் மயிலு என்ற கேரக்டரில் நடித்த ஸ்ரீதேவிக்கு இப்படம் மிகப்பெரிய புகழைக் கொடுத்தது.

அந்த மயிலு என்ற கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவும் பிரபலம். அந்த அளவுக்கு ஸ்ரீதேவி அந்த கேரக்டராகவே வாழ்ந்து தன் திறமையை காட்டி அசத்தினார். இந்த திரைப்படத்திற்கு முன்பே பாரதிராஜா ஒரு கதையை தயார் செய்து அதை ஜெயலலிதாவிடம் கூறியிருக்கிறார்.

அந்தக் கதையை கேட்ட ஜெயலலிதா இந்த படத்தை நீங்கள் எடுத்து விட்டால் இதுதான் இந்த வருட சூப்பர் ஹிட் படமாக இருக்கும் என்று பாராட்டியுள்ளார். மேலும் அந்தப் படத்தில் நடிப்பதற்கு ஜெயலலிதாவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால் சில பல பிரச்சனைகளின் காரணமாக அந்தப் படம் ஜெயலலிதாவால் நடிக்க முடியாமல் போனது. அது மட்டுமல்லாமல் படமும் டிராப் செய்யப்பட்டது. பின்னர் பாரதிராஜா 16 வயதினிலே படத்தை எடுத்து ஒரு நல்ல இயக்குனராக அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார்.

அதன்பிறகே அவர் எடுக்க முடியாமல் நிறுத்திய அந்த திரைப்படத்தை அவர் எடுக்க முடிவு செய்தார். அதற்காக ஏவிஎம் நிறுவனத்திடம் இந்த கதையை கூறி அவர் சம்மதம் பெற்றுள்ளார். பின்னர் அப்படம் ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் புதுமைப் பெண் என்ற பெயரில் வெளியானது.

ரேவதி, பாண்டியன் நடிப்பில் வெளிவந்த அந்த திரைப்படத்தில் ரேவதியின் கதாபாத்திரம் பலரையும் வியக்க வைத்தது. பாரதி கண்ட புதுமை பெண்ணாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று பாரதிராஜாவுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. சொல்லப்போனால் இந்த கதையில் ஜெயலலிதா நடித்திருந்தால் அவருக்கு நிச்சயம் பொருத்தமாக இருந்திருக்கும்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்