யாருக்கும் தெரியாத ஜெயலலிதா நடித்த கடைசி படம்.. வெளிவராமல் போன பரபர பின்னணி

தமிழக அரசியல் களத்தில் மக்கள் தலைவர்களாக பலர் உருவாகி இருக்கின்றனர். அதில் சிலர் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அப்படி மக்கள் மனதில் ஒரு இரும்பு பெண்மணியாக, சக அரசியல்வாதிகள் பிரமிப்பாக பார்க்கும் ஒரு சிறந்த அரசியல்வாதியாக இருந்தவர் ஜெயலலிதா.

அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஒரு நடிகையாக தமிழ் மக்களுக்கு அறிமுகமானார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், சிவக்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் அவர் தீவிர அரசியலுக்கு வந்த பிறகு எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் சினிமா துறையை விட்டு முற்றிலும் விலகினார். அதற்கு முன்பு இவர் கடைசியாக நடித்த தமிழ் திரைப்படம் நதியை தேடி வந்த கடல். லெனின் இயக்கத்தில் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

இதில் ஜெயலலிதா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் இணைந்து சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 1980 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஜெயலலிதாவுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்ற ஒரு கருத்தும் அப்போது இருந்தது.

மேலும் இந்தத் திரைப்படம் சரியாக விநியோகமும் செய்யப்படவில்லை. அதனால் இந்தப் படத்தைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் எத்தனையோ பழங்கால திரைப்படங்களை நம்மால் வீட்டில் இருந்தபடியே பார்க்க முடியும்.

jayalalitha
jayalalitha

ஆனால் ஜெயலலிதா நடித்த அவருடைய கடைசி திரைப்படத்தை மட்டும் இதுவரை எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும், யூடியூப் சேனல்களிலும் யாராலும் பார்க்க முடியவில்லை. இதனால் அந்த படத்துடைய பிலிம் ரோல் எரிக்கப்பட்டதா என்ற ஒரு சந்தேகமும் தற்போது பலருக்கும் எழுந்து வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்