தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை ஆளுநர் மாளிகைக்குச் சென்று தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமனம் தொடர்பாக சந்தித்துப் பேசியதாகத் தெரிவித்தார்.

தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதிக்கவில்லை என தெரிவித்த ஜெயக்குமார், தம்பிதுரை ஆளுநரைச் சந்தித்தது தொடர்பாக எதுவும் தெரியாது என கூறினார்.

மேலும் சசிகலா குடும்பத்தினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு தங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி என ஓபிஎஸ் அணி கூறியிருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்துரிமை உண்டு.

அமெரிக்க அதிபர் டிரம்பின் வெற்றிக்கு நான் தான் காரணம் என நான் கூறுவேன்; ஓபிஎஸ் தான் காரணம் என அவர் கூறுவார்; அதற்காக அவையெல்லாம் உண்மையாகுமா? என பதிலை கேள்வியாக எழுப்பினார்.