fbpx
Connect with us

Cinemapettai

இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் : கோபமடைந்த பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ்!

KJYesudas-Ilayaraja

இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் : கோபமடைந்த பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ்!

கோவை சித்தாபுதூர் பகுதியில் நடந்த அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைக்க பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

எனக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் அருளால் எனக்கு இது கிடைத்து உள்ளது.

இதற்காக நான் அதிகம் சந்தோஷம் அடைவதில்லை. மற்ற விருதுகளை பெற்றால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவேனோ அதைப்போலவே நான் இதை உணருகிறேன்.

இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அது பற்றி உங்கள் கருத்து என்ன? உங்களுக்கும் ஏதாவது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதா? என செய்தியாளர்கள் கேள்விக்கு,

நான் யாருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பவில்லை, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியவரை போய் கேளுங்கள் எனக் கூறி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் வேகமாக எழுந்து சென்று விட்டார்.

இவ்வாறு கே.ஜே.ஜேசுதாஸ் கோபமாக எழுந்து சென்ற சம்பவம் ஊடகத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் கூட ஜேசுதாசுக்கு வந்த கோபம் யார் மீது என்பது புரியாமல் தவித்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top