Tamil Cinema News | சினிமா செய்திகள்
கிரிக்கெட் பின்னணயில் சூப்பர் ஹிட் ஆன தெலுங்கு பட ரீமேக்கில் மீண்டும் இணையுது ராட்சசன் கூட்டணி
Published on
ஜெர்ஸி – தெலுங்கில் கிரிக்கெட்டை மையப்படுத்தி, அதில் சாதிக்க துடிக்கும் ஒருவனின் போராட்டத்தை நம் கண் முன்னே கொண்டு வந்த படம். 36 வயதில், தன் மகனுக்காக கிரிக்கெட்டில் மீண்டும் சாதிக்க துடிக்கும் கதாபாத்திரம் தான் ஹீரோ. நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் மெயின் ரோலில் நடித்திருந்தனர். கௌதம் தின்னுன்னாறி எழுதி இயக்கி இருந்தார். அனிருத் இசை படத்துக்கு பிளஸ்.

Nani-s-JERSEY
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் தான் இப்படத்தை தமிழில் இயக்குகிறாரம். ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிப்பது போன்ற தகவல்களும் வெளியானது.
#Jersey 🙂 pic.twitter.com/3bGuHcI0E9
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) August 11, 2019
இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக அமலா பால் இணைந்துள்ளார் என கிசு கிசுகின்றனர்.
