மும்பை: சோனி என்டர்டெய்ன்மென்ட் டெலிவிஷனின் பேஹத் தொலைக்காட்சி தொடரில் ஒரே டேக்கில் முத்தக் காட்சியில் நடித்துள்ளார் ஜெனிபர் விங்கட். சோனி என்டர்டெய்ன்மென்ட் டெலிவிஷனின் பேஹத் இந்தி தொலைக்காட்சி தொடர் இல்லத்தரசிகளிடம் மிகவும் பிரபலமானது.

இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களான குஷால் டாண்டன் மற்றும் ஜெனிபர் விங்கட் இடையே முத்தக் காட்சியை வைத்துள்ளனர்.

முத்தக் காட்சியில் நடிக்க ஜெனிபர் மறுப்பார் என்று நினைத்து இயக்குனர் தயங்கித் தயங்கி அவரிடம் கூற அவரோ ஓகே என்று கூறியுள்ளார். ஆனால் அந்த காட்சியை ஒரே டேக்கில் எடுத்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறி கன்டிஷன் போட இயக்குனரும் சம்மதித்துள்ளார். காட்சியில் நடிப்பதற்கு முன்பு அவர் குஷாலிடமும் பேசியுள்ளார். பின்னர் ஒரே டேக்கில் முத்தக் காட்சியில் நடித்து முடித்துள்ளனர்.

அந்த காட்சியை எடுக்கும்போது செட்டில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். முத்தக் காட்சி வைத்தது டிஆர்பி ரேட்டிங்கை ஏற்ற என்று கூறப்படுகிறது.