fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கேப்டன் பாணியில் ஜெகன்மோகன் ரெட்டி திட்டங்கள்.. அடுத்த மெகா பிளான் ரெடி

vijayakanth

Tamil Nadu | தமிழ் நாடு

கேப்டன் பாணியில் ஜெகன்மோகன் ரெட்டி திட்டங்கள்.. அடுத்த மெகா பிளான் ரெடி

இந்திய நாட்டிலேயே முதல்முறையாக ரேஷன் பொருள் வீடு தேடி வரும் திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செயல்படுத்த உள்ளார். கடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆன இவர் தற்போது பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை முழுவதும் விளையாட்டு நாட்களாக அறிமுகப்படுத்தினார்.

மேலும் இலவசம் பஸ் வசதியும் செயல்படுத்துவதாக தெரிவித்தார். குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பதற்காக மாணவர்களை பள்ளியில் படிக்க வைக்கும் குடும்பத்திற்கு 15,000 ரூபாய் கொடுப்பதாக தெரிவித்தார். தற்போது இந்த திட்டங்களின் வரிசையில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்களை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். மேலும் பலரும் அன்றாட வேலைகளை செய்வதால் வாரத்திற்கு கொடுக்கப்படும் பொருட்களை சரியாக வாங்க முடியாத நிலை ஏற்படுவதாக தெரிவித்தார்.

அதனால் செல்போன் மூலம் தங்களுக்கு என்னென்ன பொருட்கள் வேண்டுமோ அதனை தெளிவுபடுத்தி பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் இதன் மூலம் ரேஷன் கடையில் நடக்கும் ஊழல்களையும் ஒழிக்க முடியும் என்றும் வீடு தேடி ரேஷன் பொருட்களை கொடுப்பவர் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி அதற்கான அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பதிவில் இருந்து நீக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் இந்த திட்டத்தை ஜெகன்மோகன் ரெட்டிக்கு முன்னரே கேப்டன் விஜயகாந்த் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top