Ethirneechal 2: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் எத்தனையோ சீரியல்களில் சில சீரியல்களை மட்டும் மறக்கவே முடியாத அளவிற்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறது. அதில் ஒரு சீரியல் தான் எதிர்நீச்சல். பிற்போக்குத்தனமாக இருக்கும் குணசேகரன் குடும்பத்திற்குள் படித்த மருமகள் அடுப்பாங்கரையில் இருந்து புலம்பித் தவித்து வீட்டு வேலைக்காரியாகவும், சுதந்திரம் இல்லாமல் அவஸ்தைப்படுவதையும் ஒரு எதார்த்தமான கதையுடன் வந்தது.
இப்படிப்பட்ட இந்த குடும்பத்திற்குள் நுழைந்த ஜனனி ஒட்டுமொத்தமாக அனைவரையும் மாற்ற வேண்டும் என்று போராட்டத்தை நடத்திய நிலையில் கடைசியாக வெற்றி கிடைத்தது. ஆனால் இதற்கு மிக பக்கபலமாக இருந்த குணசேகரனின் நடிப்பு. ஆனால் தொடர்ந்து இவருடைய நடிப்பை பார்க்க முடியாமல் போனதால் ஒரிஜினல் குணசேகரனுக்கு பதிலாக வேலராமமூர்த்தி நடிக்க வந்தார்.
திருச்செல்வத்திற்கு கலாநிதி வைத்த வேண்டுகோள்
என்னதான் இவர் நடிப்பு நன்றாக இருந்தாலும் அந்த குணசேகரனை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இவரை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்த நிலையில் கதையும் கொஞ்சம் தடம் புரண்டு போனதால் அவசர அவசரமாக நாடகத்தை முடித்து விட்டார்கள்.
இருந்தாலும் இந்த நாடகத்தின் இரண்டாம் பாகமாக மறுபடியும் இதில் நடித்த ஆர்ட்டிஸ்ட்களை வைத்து திருசெல்வம் எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகமாக விரும்பி வருகிறார்கள். ஆனால் திருச்செல்வம் என்கிற ஜீவானந்தம் வேறு ஒரு கதையுடன் வருவேன் ஆனால் எதிர்நீச்சல் 2 வருவதற்கு வாய்ப்பு கம்மிதான் என்று கூறியிருந்தார்.
ஆனால் கலாநிதி மாறன், திருச்செல்வதற்கு எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தை கொண்டு வரச் சொல்லி வேண்டுகோள் வைத்து இருக்கிறார். அவரும் சம்மதம் கொடுத்த நிலையில் இன்னும் அந்த வீட்டை விட்டுக் கொடுக்க முடியாமல் இப்பொழுது வரை வாடகை கொடுத்து வருகிறார்கள்.
இது தொடர்பாக ஏதாவது அப்டேட் வருமா என்று எதிர்பார்த்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜனனி என்கிற மதுமிதா கொடுத்த அப்டேட் படி எதிர்நீச்சல் 2 நிச்சயம் வரப்போகிறது என்பது உறுதியாகிவிட்டது.
அதாவது ஜனனிடம் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி உங்களை மறுபடியும் சின்னத்திரையில் பார்க்க வேண்டும். எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் உங்க துணிச்சலான நடிப்பை பார்க்க ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறோம் இதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக நிச்சயம் உங்களுடைய நம்பிக்கை வீண் போகாது.
கூடிய விரைவில் எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்துடன் உங்களை வந்து சந்திப்போம் என்று பதிலளித்திருக்கிறார். அப்படி இவர் கொடுத்த அப்டேட் படி ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் 2 வரப்போகிறது.
அந்த வகையில் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஈஸ்வரி மற்றும் சக்தி போன்ற சில ஆர்டிஸ்ட்டுகளை வேறு எந்த நாடகத்திலும் கமிட்டாக விடாமல் கலாநிதி மாறன் எதிர்நீச்சல் 2வுக்காக லாக் பண்ணி இருக்கிறார். இன்னும் கூடிய விரைவில் ரசிகர்களின் விருப்பப்படி வரப்போகிறது.
- எதிர்நீச்சல் சீரியலை மறக்கடிக்க செய்த சன் டிவியின் புத்தம் புது சீரியல்
- டிஆர்பி ரேட்டிங்கில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்திய 6 சீரியல்கள்
- புது சீரியல் வரிசை கட்டி இருப்பதால் கலாநிதி அதிரடியாக எடுத்த முடிவு