முகமூடி படத்திலிருந்து கடைசி நேரத்தில் விலகிய முன்னணி டாப் நடிகர்.. நல்லவேளை, சிக்கியிருந்தா சிதஞ்சிருப்பார்!

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவரும் படங்களுக்கு எப்போதுமே ஒரு விதமான வரவேற்பு இருக்கும். மிஸ்கின் படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

ஆனால் அப்பேர்ப்பட்ட மிஸ்கின் ரசிகர்களையே மிகவும் சோதனைக்குள்ளாக்கிய படமென்றால் ஜீவா நடிப்பில் உருவான முகமூடி தான்.

சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் உருவாக்கிய முகமூடி படம் முதல் நாள் முதல் காட்சியை கூட தாண்டவில்லை என்பதுதான் சோகமான விஷயம்.

முகமூடி படம் வெளியான முதல்நாள் முதல் காட்சியின் இடைவேளையில் பல தியேட்டர்களில் படத்தை நிறுத்தி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முகமூடி படத்தில் முதல் முதலில் நடிகர் சூர்யா தான் நடிக்க இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

suriya-cinemapettai
suriya-cinemapettai

அந்த கால கட்டங்களில் சூர்யா தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த நிலையில் ஒருவேளை முகமூடி படத்தில் நடித்திருந்தால் அவரது மார்க்கெட் பலத்த அடி வாங்கியிருக்கும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

இந்த செய்தியை கேட்டு சூர்யா ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர். ஒருவேளை சூர்யா அந்த படத்தில் நடித்திருந்தால் அஞ்சான் படத்தை விட மோசமான விமர்சனங்களை பெற்றிருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.