நடிகர் ஜீவா மற்றும் நடிகர் ஷாருகான் இருவர் படமும் ஒரே நேரத்தில் வெளிவந்ததால் கடும் போட்டியாக  உள்ளது.

ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் கவலை வேண்டாம். நியூ ஜென் படம் என விளம்பரம் செய்ததால் இந்த படத்துக்கு ரசிகர்களிடம் ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது.

இதன் விளைவாக முதல் மூன்று நாட்களில் இப்படம் சென்னையில் மட்டும் ரூ. 1.24 கோடி வசூல் செய்துள்ளதாம். ஒருபக்கம் ஷாருக்கான் நடித்த டியர் ஜிந்தகி படமும் இங்கு சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த படம் சென்னையில் ரூ. 50 லட்சம் வசூல் செய்துள்ளது.