Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜீவாவிற்கு கிடைத்த அடுத்த வாய்ப்பு.. ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த அறிவிப்பு
ஜோக்கர், குக்கூ போன்ற புகழ் பெற்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ராஜு முருகன் இவருடன் நடிகர் ஜீவா கைகோர்த்து நடித்துள்ள படம் ஜிப்சி. ஒலிம்பியா பிலிம்ஸ் சார்பில் அம்பேத்குமார் ஜிப்சி படத்தை தயாரித்து வந்தார்.
ஆனால் இப்படம் எப்போதோ எல்லா பணிகளும் முடிந்த நிலையில் படத்தின் வெளியீடு பல முறை ஒத்திவைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் 2019 ஆம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தில் தணிக்கை தொடர்பான சிக்கல்கள் இருந்தன, மேலும் வெளியீடு ஜனவரி 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது, ஆனால் தற்போது மீண்டும் மார்ச் 6ஆம் தேதி ஜிப்சி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிப்சியில் ஜீவா உடன் நடாஷா சிங், மலையாள நடிகர் சன்னி வெய்ன் மற்றும் மலையாள இயக்குனர் லால் ஜோஸ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஜிப்சிக் கதை என்பது வலுவான அரசியல் கதை என்று சொல்கிறார்கள். அதனால் தான் படத்திற்கு சிக்கல் எழுந்து வந்ததாக கூறப்படுகிறது.
