Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜீவாவை நம்பி அவ்வளவு பணம் எல்லாம் செலவு பண்ணாதீங்க.. எச்சரித்த தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் ஹீரோவாக வலம் வந்தாலும் இன்னும் முன்னணி ஹீரோவாக மாற முடியாமல் தவித்து வருகிறார் நடிகர் ஜீவா. பிரபல தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும் தன்னால் ஜொலிக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு எப்போதுமே உண்டு.
ஜீவா தடுமாறிக் கொண்டிருந்தபோது அவருக்கு கைகொடுத்து தூக்கிவிட்ட படம்தான் கோ. பத்திரிக்கையாளர் வாழ்க்கையை சுறுசுறுப்பான கதையை அமைத்து ரசிகர்கள் ரசிக்கும் படி கொடுத்திருந்தார் கேவி ஆனந்த்.
எல்ரெட் குமார் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்திருந்தார். இந்நிலையில் கோ படத்தின் பட்ஜெட்டை ஜீவா தாங்க மாட்டார் என பிரபல தயாரிப்பாளரும் ஜீவாவின் தந்தையுமான ஆர்பி சௌத்ரி கூறினார் என கேவி ஆனந்த் கூறியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அவர் கூறியதாவது, கோ படத்தின் கதையை முடிவு செய்த பிறகு கோ படத்தின் பட்ஜெட் 13 கோடி வரை செலவு செய்யலாம் என்பதை ஆர்பி சௌத்ரியிடம் கூறியுள்ளனர்.
அதற்கு ஆர்பி சௌத்ரி, தயாரிப்பாளராக நீங்களும் என்னைப்போல் அடிமட்டத்திலிருந்து உயர்வதால் சொல்கிறேன், ஜீவாவுக்கு 13 கோடி பட்ஜெட் அளவெல்லாம் தாங்காது, 8 கோடிக்கு மேல் பிசினஸ் செய்தால் உங்களுக்கு நஷ்டம்தான் வரும் என்பதை ஓபன் ஆக சொல்லி இருந்தாராம்.
ஆனால் படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இது ஜீவா படம் மட்டுமல்ல, அயன் படத்தின் கூட்டணி என்று கூறி சௌத்ரியை சம்மதிக்க வைத்தாராம். பெற்ற மகனாக இருந்தாலும் யாரும் கஷ்டப்பட கூடாது என்பதில் அவர் காட்டிய அக்கறையால் தான் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் தயாரிப்பாளராக இன்றும் நிலைத்து நிற்கிறார் என்கிறது சினிமா வட்டாரம்.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
