ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

மாமனார் சட்டையை பிடித்த ஜீவா.. சின்னாபின்னமான பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகள் சேர்ந்து வாழும் கூட்டு குடும்ப கதையம்சம் கொண்டதால், இந்தக் காலத்தில் இப்படியும் வாழலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக நல்லவற்றை மட்டுமே எடுத்துக் கூறும் இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் தனத்தின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக வீட்டிற்கு வந்திருக்கும் மீனாவின் குடும்பத்தினருக்கும் தனத்தின் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் தனத்தை தரக்குறைவாக பேசியதை கேட்டதும் தாங்கமுடியாத தனத்தின் அம்மா, ‘என்னுடைய மகள் 25 வருடங்களாக இந்த குடும்பத்திற்காகவே குழந்தை பெற்றுக்கொள்ளாமல் தியாகம் செய்திருக்கிறாள்.

தனம் திருமணத்தின்போது போட்டு வந்த நகை அனைத்தும் இந்த குடும்பத்திற்கே செலவாகி, கொஞ்ச நகை மட்டுமே அவள் கையில் இருக்கிறது. மேலும் மீனாவின் மகள் கயலுக்கு தபால் நிலையத்தில் சேமிப்பு திட்டம் துவங்கி அதில் பணம் போடுவது என வருங்கால வைப்பு வைத்திருக்கும் நிலையில், தனத்தின் மகள் பாண்டிக்கு எந்த ஒரு சேமிப்போம் சேமிக்காமல் தனம் மற்றவர்களுக்காகவே அத்தனையையும் விட்டுக் கொடுக்கிறாள்.

இவளைப் பற்றி பேசினால் உங்கள் நாக்கு அழுகிவிடும்’ என்று மீனாவின் அப்பாவை தனத்தின் அம்மா திட்டிய உடன் மீனாவின் அப்பா, ‘இதெல்லாம் சுத்த நடிப்பு’ என தனத்தை நாடகக்காரி என்கின்ற அளவிற்கு சித்தரிக்கிறார். இதைக்கேட்டு தாங்க முடியாமல் மாமனார் என்று கூட பார்க்காமல் ஜீவா மீனாவின் அப்பா சட்டையைப் பிடித்து கோபத்தை வெளிப்படுத்துகிறான்.

இப்படி ஒருவரை ஒருவர் சண்டை போடுவதை பார்த்த கதிர் முல்லையின் மருத்துவ செலவிற்காக வாங்கிய கடனுக்காக தான் இப்படி குடும்பமே சண்டை போட்டுக் கொள்வதால், அதை தடுத்து நிறுத்தி அவர்களை கையெடுத்து கும்பிட்டு, ‘இந்த கடனை எல்லாம் நானே நடை அடைத்து விடுகிறேன்.

அது வரை இந்த வீட்டிற்கு வரமாட்டேன்’ என முல்லையை அழைத்துக்கொண்டு கதிர் கிளம்புகிறான். இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தனம்-மூர்த்தி இருவரும் அழுது கொண்டே அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தாலும் கதிர்-முல்லை அதை கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

இவ்வாறு கூட்டு குடும்பத்தில் இருந்த நான்கு அண்ணன் தம்பிகள் பணம் என்ற ஒரு பிரச்சினை வந்ததும் அதை சமாளிக்க முடியாமல் கதிர் எடுத்த இந்த முடிவு பலரை கலங்க வைத்திருக்கிறது. வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் முல்லையின் வீட்டிற்கு சென்று அங்கு தங்கி இந்த கடனை அடைப்பதற்காக கதிர் வெளியூர் சென்று சம்பாதிக்க திட்டம் போடுவான்

- Advertisement -spot_img

Trending News