நடிகர் ஜீவா நடிக்கும் படம் கொரில்லா இந்த படத்தை  ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம். இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பல சினிமா நட்ச்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

jeeva gurillea feat

இந்த படத்திற்கு டான் சாண்டி கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் .‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் படத்திற்கு இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

jeeva gurellia 2

இந்தப் படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்று நடிக்கிறது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் ’காங்’ சிம்பன்சி குரங்கு நடிப்பது இது தான் முதன்முறை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே இருந்தே ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

kong

இந்த படத்தின் முதல் நாள் படபிடிப்பு இன்று பாண்டிசேரியில் பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதம் தாய்லாந்தில் படபிடிப்பு தொடரவிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கோடை விடுமுறையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் கொரில்லா படம்  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதுமட்டும் இல்லாமல் குழந்தைகளையும் இந்த படம் கவரும் என எதிர்பார்க்கபடுகிறது.