Connect with us
boomerang-movie

ஜீவா – ஆர்யா கூட்டணியில் தயாராகும் திரைப்படம்

Jeeva-Arya

News | செய்திகள்

ஜீவா – ஆர்யா கூட்டணியில் தயாராகும் திரைப்படம்

நடிகர் ஜீவா ஆர்யா இருவரும் இதுவரை இரண்டு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சிவா மனசுல சக்தி படத்துல ஜீவா ஹீரோவா நடிச்சுருப்பாரு ஆர்யா கௌரவ வேடத்தில் வருவாரு. அந்த படத்தின் வெற்றி ஜீவாவுக்கு நல்ல பேரு வாங்கி கொடுத்துச்சு.

இதே மாதிரி ஆர்யா ஹீரோவா நடிச்ச பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல ஜீவா கௌரவ வேடத்துல நடிச்சுருப்பாரு. இந்த படம்தான் ஆர்யாவை நகைச்சுவை நடிகராகவும் மக்களுக்கு வெளிக்காட்டியது.

இப்படி ரெண்டு பேருமே ஒருத்தர் படத்துல ஒருத்தர் கௌரவ வேடத்தில் நடிச்சுருந்தாலும், ஒரே படத்தில் முழு நீளமாக நடிச்சதில்லைங்க. ஆனா இப்போ இவுங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க போறதா செய்தி வெளி வந்துருக்கு.
இந்த படத்தை விஜய் ஆண்டனி நடித்த நான் படத்தோட இயக்குனர் ஜீவா ஷங்கர் இயக்கபோகிறார், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறதா இருக்காங்க.

நான் படம் மாதிரி ஒரு திரில்லர் படமாக இந்த படமும் இருக்கும்னு இயக்குனர் சொல்லி இருக்காராம். தொடர் தோல்விகளை கொடுத்து கொண்டிருக்கும் ஜீவாவிற்கும் ஆர்யாவிற்கும் இந்த படம் வெற்றிப்படமா இருக்குமான்னு பாப்போம்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: போக்கிரி ராஜா, கடம்பன் மாதிரி இல்லாமல் உருப்புடியா ஒரு படம் நடிங்கப்பா ப்ளீஸ்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top