Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
Published on
தமிழ் சினிமாவில் வெளியாகி மெகா வரவேற்ப்பை பெற்ற படம் ஜோக்கர். இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் குரு சோமசுந்தரம். இவர் தற்போது ஜதின் மற்றும் நிஷாந்த் ஆகியோரின் இயக்கத்தில் விஜய் மூலன் அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் ஓடு ராஜா ஓடு என்ற காமெடி திரில்லர் படத்தில் நடித்து உள்ளார்.
செப்டாப் பாக்ஸை வாங்க செல்லும் ஹீரோ படாத பாடுகளையும், கஷ்டங்களை விறுவிறுப்பான திரைக்கதையுடன் இயக்கி உள்ளார்கள் ஜதின் மற்றும் நிஷாந்த். இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகையான சிம்ரன் நடித்துள்ளார்.
ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் சென்னை ரிலீஸ் உரிமையை ஜாஸ் சினிமாஸ் வாங்கி இருப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன.
