நிதியே இல்லாமல் சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவிட்டு எப்படி கட்சியை நடத்துவது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியின் காதில் கிசுகிசுத்ததை அடுத்துதான் வழக்குகளும், விசாரணைகளும் தினகரன் கழுத்தை இறுக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

அடுத்தகட்டமாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் ஆயத்தம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

தினகரனை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட டெல்லி போலீசார் அப்படியே பெங்களூருக்கும் சென்று சசிகலாவிடம் விசாரணை நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்துவிட்டு வந்திருக்கின்றனர். மேலும் இந்த வழக்கு விரைவில் சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட இருக்கிறது.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெ.,சசியுடன் ஐந்தாவது குற்றவாளியாக தினகரன் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் அந்த வழக்கில் தினகரன் ஆதாரங்களை தொடர்ந்து அழித்துக்கொண்டே வந்ததால் போலீசாருக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் லண்டன் ஹோட்டல் வழக்கை எங்களால் விசாரிக்க முடியவில்லை என்று போலீசார் கையை விரித்தனர். இதையடுத்து தினகரனை வழக்கிலிருந்து நீக்கினர்.

அப்போது தமிழக போலீஸ் விட்டதை இப்போது டெல்லி போலீஸ் பிடித்துள்ளது. தினகரனுக்கு கிடுக்குப்பிடி போட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதையாக, தினகரனிடம் விசாரணை நடத்திய போலீசாருக்கு பலவேறு திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, போயஸ் கார்டனில் பாதாள அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25,000 கோடி ரூபாய் யாருக்கும் தெரியாமல் ஹவாலா ரூட்டில் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஜெ., மருத்துவமனையில் இருந்த போது அவரது ரகசிய அறையில் இருந்த பணம் மற்றும் ஆபரண நகைகளை உடனடியாக நாடுகடத்த திட்டமிட்டார் சசிகலா. இதற்காக, தினகரனை வைத்து ஒரு மாஸ்டர் பிளானை அரங்கேற்றினார். ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்த அத்தனையும் கண்டெய்னர் லாரிகளின் மூலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடல்வழி மார்கமாக வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதற்கு முழுக்க முழுக்க மூளையாக செயல்பட்டது தினகரன் தானாம்.

இந்த பாதாள அறைகளின் லாக்கர் ஜெ.,வின் கால் ரேகைகளுடன் பயோமெட்ரிக் முறையில் பூட்டப்பட்டிருந்தது. இதனை திறக்க வேண்டுமானால் ஜெயலலிதாவின் கால் ரேகைகள் தேவை. அதனால் தான் அவரது கால்களை எடுக்க சசிகலா உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி ஆர்.கேநகர் இடைத்தேர்தலின் போது பட்டுவாடா செய்வதற்காகவும், முடக்கப்பட்ட இரட்டை இலை  சின்னத்தை மீட்பதற்காகவும் மீண்டும் ஹவாலா ஆப்பரேட்டர்கள் மூலமாக சென்னை கொண்டு வரப்பட்டது. விசாகப்பட்டினம் துறை முகத்தில் இருந்து கர்நாடகா வழியாக கொச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கொச்சியில் உள்ள ஹவாலா ஆப்பரேட்டர்கள் மூலமாக சுகேஷ் சந்திரசேகரிடம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணையின் போது சுகேஷ் சந்திராவை லாடம் கட்டிய டெல்லி போலீசுக்கு பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தது. 1991-96 காலக்கட்டத்தில் நடந்த லண்டன் ஹோட்டல் வழக்கு தொடர்பான ஹவாலா ஆப்பரேட்டர்களுடன் தினகரன் இன்னமும் தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சில காரணங்களுக்காக தினகரனை ஜெ.,கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தார். கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டாலும் ஜெ.,வின் ரகசிய கட்டளைகளை நிறைவேற்றும் இடத்தில் தினகரன் வைக்கப்பட்டிருந்தார். ஜெ.,மற்றும் சசி தரும் பலகோடிகளை வெளிநாடுகளில் முதலீடு செய்யும் முக்கிய பொறுப்பு தினகரனுக்கு வழங்கப்பட்டிருந்தது. 1991ல் இருந்து 2016 வரையிலான கால கட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் தினகரன் மூலமாக வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவரங்கள், சசிகலா மற்றும் தினகரன் இரண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும். விசாரணையின் போது தினகரன் இதுகுறித்து மழுப்பலாகவே பதில் அளித்து வந்ததால் தற்போது சசிகலாவை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.