இந்த 6 படம் மட்டும் இல்லேன்னா ஜெயம் ரவி ஆளே அட்ரஸ் இல்லாம போயிருப்பார்.. நல்ல வேல மனுஷன் எஸ்கேப்

தமிழ் சினிமாவில் 17 வருடங்களாக முன்னணி நடிகராக வலம்வரும் ஜெயம்ரவி, இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஜெயம் ரவியின் அண்ணன் M. ராஜா இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அந்த படத்தின் பெயரையே தனது பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார்.

ஜெயம்ரவிக்கு சினிமாவில் நுழைவது அவ்வளவு கடினமான விஷயம் ஒன்றும் அல்ல. ஏனென்றால் அவரோட அப்பா தயாரிப்பாளராகவும் அண்ணன் இயக்குனராகவும் இருந்ததால் ரொம்ப ஈஸியா சினிமாத்துறைக்கு என்ட்ரி ஆகி விட்டார்.

பல பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் ஈசியா நுழைந்தாலும் திறமை என்பது தான் இந்த பீல்டுல கால் ஊன்றுவதற்கு காரணமாக இருக்கும். அந்த வகையில ஜெயம் ரவி செலக்ட் பண்ண ஒவ்வொரு படத்துலயும் அவரோட டெடிகேஷன் ரொம்பவே பிரமிப்பா இருக்கும்.

ஏனென்றால் M.குமரன் S/O மகாலட்சுமி’-யில் இவருடைய பாக்ஸர் கதாபாத்திரம், அதன்பின் அப்பாவுக்கு அடக்கமான மகனாக நடித்த ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, சமூக பிரச்சினைகளுக்காக வெகுண்டெழும் ‘தனி ஒருவன்’ போலீஸ் கெட்டப், ரொமான்டிக் ஹீரோவாக ‘ரோமியோ ஜூலியட்’, கோமாளி என இவருடைய ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கெட்டப்பை செலக்ட் செய்து நடித்துள்ளார்.

ஜெயம்ரவியின் அடுத்த படமாக மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் கம்பீரமான தோற்றத்தில் ராஜராஜ சோழனாக நடிக்கவிருக்கிறார்.

இன்னிக்கு 40வது பிறந்தநாளை கொண்டாடும் ஜெயம் ரவிக்கு ரசிகர்களும் திரைபிரபலங்களும் சமூக வலை தளங்களின் பட்டைய கிளப்பும் அளவுக்கு ஜெயம் ரவியின் போட்டோவை தெறிக்க விடுகின்றனர்.