சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சுதாகரித்துக் கொண்ட ஜெயம் ரவி.. டைரக்டர் செலக்சன இப்படித்தான் இருக்கணும்

Jayam Ravi : ஜெயம் ரவிக்கு கடந்த சில வருடங்களாக சினிமா வாழ்க்கையும் சரி, சொந்த வாழ்க்கையும் சரி பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. அவரின் நடிப்பில் பல படங்கள் வெளியானாலும் சொல்லிக் கொள்ளும்படி எந்த படங்களும் அமையவில்லை.

பொன்னியின் செல்வன் படம் மட்டும் ஓரளவு நல்ல பெயரை ஜெயம் ரவிக்கு வாங்கி கொடுத்தது. இந்நிலையில் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக ஜெயம் ரவி அறிவித்தார். இதனால் அவரைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வெளியாக தொடங்கியது.

மேலும் ஜெயம் ரவியின் சினிமா கேரியரில் அவர் எந்த படங்களில் நடிக்க வேண்டும் என்பதை ஆர்த்தியும் அவரது அம்மா தான் முடிவு செய்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் இப்போது தனித்து இருக்கும் ஜெயம் ரவி அடுத்தடுத்து கவனமாக இயக்குனர்களை தேர்வு செய்து வருகிறார்.

ஜெயம் ரவியின் அடுத்தடுத்த பட இயக்குனர்கள்

அந்த வகையில் கவினுக்கு டாடா என்ற ஹிட் படத்தை கொடுத்த கணேஷ் கே பாபு இயக்கத்தில் ஜெயம் ரவியின் 34-வது படம் அமைய இருக்கிறது. இந்த படத்திற்கான ஷூட்டிங் இந்த வருடம் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. அடுத்ததாக எதிர்பார்க்காமல் ஜெயம் ரவி கமிட்டான படம் தான் எஸ்கே25.

இப்போது கோலிவுட்டில் முக்கியமான நடிகராக பார்க்கப்படும் சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான பூஜை அண்மையில் போடப்பட்ட நிலையில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்க உள்ளார்.

கதாநாயகனாக நடித்து விட்டு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்த கூடும். ஆனால் மிகவும் வலுவான கதாபாத்திரம் என்பதால் ஜெயம் ரவி இதை ஒற்றுக்கொண்டிருக்கிறார். இவ்வாறு மிகவும் அனுபவம் வாய்ந்த இயக்குனர்களுடன் அடுத்தடுத்து ஜெயம் ரவி கூட்டணி போடுகிறார்.

- Advertisement -

Trending News