Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோமாளி படத்தில் 9 கெட் – அப்களில் நடிக்கிறார் ஜெயம் ரவி. என்னென்ன வேடம் தெரியுமா ?

வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல் ஐசரி கணேஷ் தயாரிக்கும்  படம் தான் JR 24 . குறும்படங்கள் வாயிலாக ரீச் ஆன பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜெயம் ரவியுடன்  காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கிறார். படத்தில் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம், ஆர்.ஜே ஆனந்தி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஹிப் ஹாப் அதி இசை அமைக்கிறார். முன்பு கிசுகிசுத்து போலவே இப்படத்தின் தலைப்பு “கோமாளி” என்பதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். மேலும் வித்தியாசமான டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி நம் ஆர்வத்தை தூண்டியது.

அப்போஸ்டரில் 1980 தொடக்கி 2022 வரை ஆண்டுகள் சில இருந்தது. மேலும் கடிகாரம் போல வட்டமாக இருந்தது. எனவே இது ஒருவனின் வாழைக்காயை மையப்படுத்தி எடுக்கப்படும் “coming of age ” ஜானர் படமாக இருக்கும் என நெட்டிசன்கள் ஊகித்து வந்தனர்.  இந்நிலையில் இப்படத்தை பற்றிய சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வெவ்வேறு ரோல்களில் நடித்திருக்கிறாராம் . அதில் ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் என்பது நான்கு வேடங்களாம். மீதி ரோல்கள் படம் ரிலீஸ் வரை சஸ்பென்சாக வைக்க முடிவு செய்துள்ளதாம் படக்குழு. மேலும் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய உலகையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சித்தரிக்கும் நகைச்சுவை கலந்த படமாக இது இருக்கும் என்கின்றனர். இவர்கள் சொல்வதை வைத்து பார்க்கையில் டயம் ட்ராவல் ஜானரோ என்று யோசிக்க தோன்றிகிறது.

மேலும் இப்படத்தின் டிவி ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் விஜய் கைப்பற்றியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top