Connect with us
Cinemapettai

Cinemapettai

கமெர்ஷியல் காமெடி கலாட்டா ப(பா)டம் – கோமாளி திரைவிமர்சனம்

Reviews | விமர்சனங்கள்

கமெர்ஷியல் காமெடி கலாட்டா ப(பா)டம் – கோமாளி திரைவிமர்சனம்

ஐசரி கணேஷ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று ரிலீஸ் ஆகியுள்ள படமே கோமாளி.  தலைப்பு தொடங்கி, ஜெயம் ரவி அவர்களின் 9 கெட் – அப் போஸ்டர், பாடல்கள், ட்ரைலரில் படத்தின் கதையான 16 வருடங்களாக கோமாவில் இருந்தவன் என சொல்லி, படிப்படியாக நமக்கு படத்தின் மீதான ஆர்வத்தை மார்க்கெட்டிங் வாயிலாக தூண்டியது இந்த படக்குழுவுக்கு மிகப்பெரிய ப்ளஸ்.

கதை – சிறுவயது ஜெயம் ரவி, யோகி பாபுவும் நண்பர்கள். ஸ்கூலில் நடக்கும் காதல். ஏற்படும் விபத்து, கோமாவில் கிடப்பது என ஆரம்பிக்கிறது கதை. முழித்த சமயத்தில் தன் தந்தையின் மரணம், நண்பனே தங்கையின் கணவன், உலகில் டெக்னலால்ஜி ஏற்படுத்தும் தாக்கம் என படர்கிறது முதல் பாதி.

இரண்டாம் பாதியில் KS ரவிக்குமாரின் அரசியல் சேட்டைகள், பாரம்பரிய சொத்து சிலை என சூடு பிடிக்கிறது. அதன் பின் சிலையை மீட்டாரா நமக்கு என்ன சொல்லவருகிறார் என்பது மீதி கதை.

பிளஸ் – ஜெயம் ரவி, செகண்ட் ஹீரோ – யோகிபாபு, இயக்குனரின் திரைக்கதை, படத்தின் மெஸேஜ்

மைனஸ் – இரண்டாம் பாதியின் ஓடும் நேரம்

அலசல் – குடும்பத்துடன் பார்க்க நல்ல நகைச்சுவை படம். லாஜிக் பற்றி அதிகம் யோசிக்காமல் சென்றால் முழு திருப்த்தியுடன் திரும்பி வரலாம். திரைக்கதை படத்துக்கு கூடுதல் பலம். வெறும் கமெர்ஷல் படமாக இருப்பினும் அடிக்கடி அவ்வப்பொழுது சில இடங்களில் மெஸேஜ் வைத்த இயக்குனருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். மனிதநேயத்தின் முக்கியதுவம் பற்றி பேசுகிறது இப்படம்.

ஆக மொத்தத்தில் குடும்பமாக சென்று இப்படத்தை பார்த்து, இன்றைய தேதிக்கு ஏற்ற மெசஜையும் சொல்லுகிறது இப்படம்.

சினிமாபேட்டை ரேட்டிங் – 3.75/5.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top