Connect with us
Cinemapettai

Cinemapettai

வைரலாகுது ஜெயம் ரவியின் கோமாளி பட பர்ஸ்ட் லுக் போஸ்டர். டயம் ட்ராவல் படமோ ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வைரலாகுது ஜெயம் ரவியின் கோமாளி பட பர்ஸ்ட் லுக் போஸ்டர். டயம் ட்ராவல் படமோ ?

வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல் ஐசரி கணேஷ் தயாரிக்கும் படம் தான் JR 24 . கோமாளி படத்தில் 9 கெட் – அப்களில் நடிக்கிறார் ஜெயம் ரவி.

குறும்படங்கள் வாயிலாக ரீச் ஆன பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கிறார். படத்தில் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு, பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம், ஆர்.ஜே ஆனந்தி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் அதி இசை அமைக்கிறார்.

அப்போஸ்டரில் 1990 தொடக்கி 2016 வரை ஆண்டுகள் உள்ளன. தொழில்நுட்ப துறையில் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய உலகையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சித்தரிக்கும் நகைச்சுவை கலந்த படமாக இது இருக்கும் என்கின்றனர். இவர்கள் சொல்வதை வைத்து பார்க்கையில் டயம் ட்ராவல் ஜானரோ என்று யோசிக்க தோன்றிகிறது.

comali

இன்று காலை இப்படத்தின் போஸ்டர் வெளியானது

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top