Tamil Cinema News | சினிமா செய்திகள்
தொலைக்காட்சியில் நேரடியாக ரிலீஸாகும் டாப் ஹீரோவின் படம்.. அதிர்ச்சியான ரசிகர்கள்!
தமிழ் திரையுலகில் தனது அயராத உழைப்பினால் நீங்காத இடம் பிடித்தவர் தான் ஜெயம் ரவி. மேலும் ஜெயம் ரவியின் 25-ஆவது படமான ‘பூமி’ ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.
இந்த நிலையில் ‘பூமி’ படம் நேரடியாக பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதாவது பிரபலமான இயக்குனர் லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா, சதீஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘பூமி’.
எனவே, இந்தப் படம் கடந்த மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனவைரஸ் காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ‘பூமி’ படம் OTT- ல் வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தற்போது அதற்கு மாறாக ‘பூமி’ படம் வருகிற தீபாவளி பண்டிகை அன்று நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்ப பட உள்ளதாகவும், அதற்குப் பிறகே சன் நெக்ஸ்ட் OTT தளத்தில் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இதற்காக பெரும் தொகையை சன் டிவி நிறுவனம் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான சுஜாதாவிற்கு கொடுத்துள்ளார்கள் என்ற செய்தியும் கிடைத்துள்ளது.
எனவே இதனை அறிந்த ஜெயம்ரவியின் ரசிகர்கள் ‘பூமி’ படத்தை பார்க்க பெரும் ஆவலுடன் தீபாவளியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
