புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மாமியாரிடம் அனுபவிச்ச கொடுமைக்கு பதிலடி கொடுக்கும் ஜெயம் ரவி.. இயக்குனருடன் புது படத்திற்கு போட்ட அஸ்திவாரம்

Jayam Ravi New Movie: ஜெயம் ரவி, அப்பா மற்றும் அண்ணன் மூலம் சினிமாவிற்குள் ஈசியாக நுழைந்திருந்தாலும் இவருடைய திறமையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். ஆனால் அதை தக்க வைக்க முடியாமல் சமீப காலமாக போராடி வருகிறார். காரணம் சமீபத்தில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் சொல்லிக்கும்படி இல்லாமல் தோல்வியை சந்தித்து வருகிறது. அந்த வகையில் பொன்னின் செல்வன் மட்டும்தான் இவருக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது.

அதுவும் இவர் நான்கு நடிகர்களில் ஒருவராக நடித்ததால் மட்டும் தான் அந்த படம் பெயர் வாங்கி கொடுத்திருக்கிறது. அதனால் எப்படியாவது மறுபடியும் தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று தவித்துக் கொண்டு வருகிறார். சர்ச்சை மற்றும் கிசுகிசுவிலும் சிக்காத நடிகர்களில் இவரும் ஒருவர். ஆனால் கடந்த சில மாதங்களாக இவருடைய விவாகரத்து பேச்சு தான் பேசும் பொருளாக அமைந்தது.

ஆனாலும் இவர் மீது தப்பு இல்லை என்று தான் ரசிகர்கள் இவருக்கு சப்போர்ட் பண்ணி வருகிறார்கள். அந்த அளவிற்கு ஜெயம் ரவி ஒரு நம்பிக்கையான ஆக்டர் என்று ரசிகர்கள் மனதில் முத்திரையை பதித்திருக்கிறார். இவருடைய விவாகரத்துக்கு முக்கிய காரணம் ஜெயம் ரவியின் மாமியார் தான். மாமியாரின் தயாரிப்பில் சில படங்களின் நடித்ததால் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்திருக்கிறார்.

இதனால் தான் இவருடைய மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருக்கிறார். அத்துடன் இப்போதைக்கு இங்கே இருக்க வேண்டாம் என்று மும்பையில் இவருக்கு என்று ஒரு ஆபீஸ் போட்டு அங்கு சினிமா தொடர்பான வேலைகளை செய்து வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வியை சந்தித்ததால் சினிமாவிலும் தொடர் தோல்விகளை சந்தித்து விடக்கூடாது என்பதற்காக எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்.

ஆனால் தீபாவளி அன்று வெளிவந்த பிரதர் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்து விட்டது. இதனை தொடர்ந்து ஜெனி மற்றும் காதலிக்க நேரமில்லை என்கிற படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு ஜெயம் ரவிக்கு கிடைத்திருக்கிறது. கிடைக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிட கூடாது என்ற விஷயத்தில் ஜெயம் ரவி கவனமாக இருக்கிறார்.

இதனை தொடர்ந்து வடக்குப்பட்டி ராமசாமி மற்றும் டிக்கிலோனா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் யோகி உடன் ஜெயம் ரவி கூட்டணி வைக்கப் போகிறார். அதாவது இவர்கள் கூட்டணியில் வருகிற படம் எந்த மாதிரியான கதை என்பது ஒன் லைன் ஸ்டோரியாக வெளிவந்திருக்கிறது.

அதாவது ஜெயம் ரவியின் சொந்த வாழ்க்கையில் நடந்தது போல படத்திலும் மாமியார் கொடுமை அனுபவிக்கும் மருமகன் விஷயத்தை தான் படமாக போகிறார்கள். இதன் மூலம் மாமியாரிடம் அனுபவித்த கொடுமைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெயம் ரவி ரியலாக நடிக்கப் போகிறார். அப்படி என்றால் பட்ட கஷ்டங்களையும், துன்பங்களையும் காட்டும் விதமாக ஜெயம் ரவி நடித்துக் காட்டுவதால் நிச்சயம் இந்த படம் அவருக்கு கை கொடுக்கும்.

- Advertisement -

Trending News