Connect with us
Cinemapettai

Cinemapettai

jayamravi-karthi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஷூட்டிங் முடிந்தது என்ற ஜெயம் ரவி.. பங்கமாக கலாய்த்த கார்த்தி.. கலகலப்பான ட்விட்டர் பதிவு

சினிமாவில் கவனிக்கப்படும் இளம் தலைமுறை நடிகர்களாக வலம் வரும் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் தனித்தனியே பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தாலும் இணைந்து இதுவரை எந்த படத்திலும் நடித்ததில்லை.

தற்போது மணிரத்னம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தில்தான் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது வட இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ஜெயம்ரவி பொன்னியின் செல்வன் படத்தில் தன்னுடைய இரண்டு பாகத்திற்கான மொத்த படப்பிடிப்புகளும் முடிந்து விட்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்திருந்தார். பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி தான் அருள்மொழிவர்மன் என்ற முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அவருக்கு அடுத்தபடியாக நடிகர் கார்த்தி வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் கார்த்தியின் படப்பிடிப்புகள் இன்னும் ஆறு நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில் ஜெயம்ரவி உற்சாகமாக படப்பிடிப்பை முடித்து விட்டேன் என்று போட்ட பதிவுக்கு கார்த்தி படத்தில் இடம்பெறுவது போலவே தூய தமிழில் வசனம் பேசி பதிவிட்டது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

ஜெயம் ரவியின் பதிவிற்கு கார்த்தி, இளவரசே, நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம் – வந்தியத்தேவன் என கிண்டல் செய்துள்ளார். இந்த பதிவு லைக்குகளை குவித்து வருகிறது.

karthi-jayam-ravi-tweet-troll

karthi-jayam-ravi-tweet-troll

Continue Reading
To Top