Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்யுடன் போட்டி போடும் ஜெயம் ரவி.! எதில் தெரியுமா?
இளைய தளபதி விஜய் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வர அனைவருக்கும் பிடிக்கும். இவர் தற்போது விஜய்-61 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் மேலும் மூன்றாவது கதாபாத்திரத்தில் மாயாஜாலம் செய்யும் மந்திரவாதியாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மிருதன் பட இயக்குனர் ஜெயம் ரவியை வைத்து டிக் டிக் டிக் என்ற ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவியும் ஒரு மந்திரவாதியாக நடிக்கிகிறாராம், மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு 90% முடிவடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இவர்களில் யாருடைய முயற்சி மக்களிடையே அதிகமாக வரவேற்பை பெற போகிறது என பொறுத்திருந்து பார்போம்.
