நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகிய திரைப்படம் “டிக் டிக் டிக்” இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது படம் வெளியாகி 3 வாரம் கடந்துவிட்டது இந்த நிலையில் படத்தின் வசூல் விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து வெளிவரத் தொடங்கியுள்ளது.

டிக் டிக் டிக் திரைப்படம் இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரைப்படம் இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை 25 கோடிகள் வரை வசூல் சேர்த்துள்ளது அதேபோல் இந்த வாரமும் பல திரையரங்கில் இன்னும் அதிக காட்சிகள் ஒதுக்கபட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 35 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தெரிகிறது, ஜெயம் ரவிக்கு இந்த திரைப்படம் ஒரு நல்ல படமாக அமைந்துள்ளது, தற்பொழுது ஜெயம் ரவியின் மார்கெட் இந்த திரைப்படம் மூலம் உயர்ந்துள்ளது, இதனால் அடுத்த படத்தில் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளார்.