எதிர்பார்ப்பை எகிற விட்ட ஜெயம் ரவியின் சைரன் வீடியோ.. தேசியவிருது நடிகையுடன் வித்தியாசமான கதைக்களம்

ஜெயம் ரவி நடிப்பில் சமீபகாலமாக வெளியான படங்கள் எதுவும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 31ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஜெயம் ரவியின் 30 வது படத்தை எம் ராஜேஷ் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். இதைத்தொடர்ந்து ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Also Read : 100 நாட்களை தாண்டிய ஜெயம் ரவியின் 6 படங்கள்.. பல ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்த மனுஷன்

அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் சைரன் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரர் நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.

மேலும் ஹோம் மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது. இதில் கைதியாக ஜெயம் ரவியும், காவல் அதிகாரியாக கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜெயம் ரவி இணைந்துள்ளனர்.

Also Read : பொன்னியின் செல்வன் போஸ்டரில் ஏற்பட்ட குழப்பம்.. அவமானத்தை நாசுக்காக திருத்திய ஜெயம்ரவி

மேலும் சமுத்திரகனி, யோகி பாபு போன்றோரும் சைரன் படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் ஜெயம் ரவியின் சைரன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இப்படம் க்ரைம் திரில்லர் படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய ஸ்கோப் உள்ள நிலையில் இப்படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கான அடுத்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Also Read : வெறும் 5 படங்களில் மக்கள் மனதை வென்ற எஸ்பி ஜனநாதன்.. ஜெயம் ரவிக்கு கொடுத்த மாஸ் ஹிட்