விஜய் படத்தில் ஆதிவாசியாக நடிக்கும் ஜெயம்ரவி!

ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி தற்போது தமிழ் சினிமாவின் பிஸி நடிகராக வலம்வருகிறார். தற்சமயம் போகன் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக மதராசப்பட்டினம், தலைவா புகழ் ஏ.எல்.விஜய்யுடன் இணையவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கவுள்ளது. இப்படத்தில் தெலுங்கு நாயகி சாயிஷா ஹீரோயினாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இப்படத்தில் ஜெயம்ரவி, ஆதிவாசியாக நடிக்கிறாராம். மேலும் இதன் படப்பிடிப்பு அந்தமான், தாய்லாந்து போன்ற மலைக்காடுகள் நிறைந்த பகுதிகளில் படமாக உள்ளதாம். அடுத்த ஆண்டு பொங்கலில் படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. 24 படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ‘திரு’தான் இந்த படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்

Comments

comments