fbpx
Connect with us

Cinemapettai

காப்பி இயக்குனருடன் கைக்கோர்த்த ஜெயம் ரவி.. எதுக்கு சார் இந்த வேண்டாத வேலை!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காப்பி இயக்குனருடன் கைக்கோர்த்த ஜெயம் ரவி.. எதுக்கு சார் இந்த வேண்டாத வேலை!

தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்கள் மிகக் குறைவு. அதிலும் சுவாரசியமாக இதுவரை இல்லாத புதிய கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் ஜெயம் ரவி.

மாஸ் படமாக இருந்தாலும் சரி, காதல் படமாக இருந்தாலும் சரி, சென்டிமென்ட் படமாக இருந்தாலும் சரி, எல்லாத்துக்கும் கச்சிதமாக பொருந்துகிறார் ஜெயம் ரவி. அடுத்ததாக இவரது நடிப்பில் பூமி என்ற படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.

இது ஜெயம் ரவியின் 25வது படமும் கூட. இந்நிலையில் அடுத்ததாக தமிழ் சினிமாவின் காப்பி இயக்குனர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அட்லீ உடன் கூட்டணி போட்டுள்ளார் ஜெயம் ரவி.

தளபதி விஜய்யின் படங்களை தொடர்ந்து டைரக்ட் செய்து முன்னணி இயக்குனராக வளர்ந்தவர் அட்லீ. இன்று அவருடைய சம்பளம் 20 கோடிக்கும் மேல். ஹிட் படம் கொடுத்தாலும் அடுத்த படம் கொடுக்க ஆள் இல்லாமல் சுற்றி வருகிறார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூல் கொடுக்கும் நாயகனான ஜெயம் ரவியை வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தை அட்லீயின் உதவி இயக்குனர் டைரக்ட் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால் கோலிவுட் வட்டாரங்களில் மூத்த தயாரிப்பாளர்களின் சிலர் அட்லீ படத்தில் நடிக்க வேண்டாம் என அவருக்கு அறிவுரை கொடுத்து வருகிறார்களாம்.

Continue Reading
To Top