Tamil Cinema News | சினிமா செய்திகள்
பல கோடி பட்ஜெட்டை தாங்குவாரா ஜெயம் ரவி? உசுப்பேத்தி சோலிய முடிச்சிடுவாங்க போல
மினிமம் கேரண்டி நடிகர் என்ற பெயருடன் நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் ஜெயம் ரவி. ஆரம்ப காலத்தில் தெலுங்கு படங்களை ரீமேக் செய்து நடித்து வந்தவர் அதன்பிறகு நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நல்லதொரு கதாநாயகனாக வலம் வந்தார்.
இடையில் சிறிது காலம் இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டு வந்தவர் ரோமியோ ஜூலியட் என்ற வெற்றிப் படத்தின் மூலம் தனது வெற்றிப் பயணத்தை தொடர ஆரம்பித்தார். இடையில் ஓரிரண்டு படங்கள் சறுக்கினாலும் அவ்வபோது ஹிட் கொடுத்து வந்தார்.
சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி மற்றும் அடங்கமறு ஆகிய இரண்டு படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது 400 கோடி பட்ஜெட்டில் மணிரத்னம் உருவாகிவரும் பொண்ணியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பொன்னியின் செல்வன் படத்தில் அதிக கதாபாத்திரங்கள் நடிப்பதால் பட்ஜெட் பெருசானதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் ஜெயம் ரவி தனியாக 37 கோடி பட்ஜெட் அளவுக்கு மார்க்கெட் வைத்துள்ளாரா என்பது கேள்விக்குறிதான்.
கோமாளி படம் 50 கோடி வசூல் செய்தாலும் இன்னும் ஜெயம்ரவியின் தமிழ்நாடு மார்க்கெட் அளவு 20 முதல் 30 கோடி வரையில் தான் இருக்கிறது. அப்படிப் பார்க்கையில் 37 கோடி பட்ஜெட் என்பது குருவி தலையில் பனங்காயை வைத்தது போன்றதுதான்.
இருந்தாலும் தனி ஒருவன், கோமாளி போன்ற படங்கள் அதிக அளவில் வசூல் செய்துள்ளதால் இதனை தாங்குவார் என்று ஒரு சிலர் நினைத்தாலும் இயக்குனர் என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அகமது என்பதால் சற்று யோசிக்கின்றனர்.
