ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம்ரவி தற்போது தமிழ் சினிமாவின் பிஸி நடிகராக வலம்வருகிறார். தற்சமயம் போகன் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக மதராசப்பட்டினம், தலைவா புகழ் ஏ.எல்.விஜய்யுடன் இணையவுள்ளார்.

அதிகம் படித்தவை:  விஷாலை விட்டு விலகிய ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவா?

இப்படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது ஒப்பந்தமாகி உள்ளார். விக்ரமின் இரு முகன், சூர்யாவின் S3 படங்களை தொடர்ந்து இந்த படத்துக்கும் அவர் இசையமைக்கவுள்ளார்.

அதிகம் படித்தவை:  நான் தனி ஒருவன் தான் - போலீசாக ஜெயம் ரவி மிரட்டும் அடங்கமறு ட்ரைலர் !

இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கி சென்னை மற்றும் அந்தமானில் விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது. மேலும் படம் அடுத்த ஆண்டு பொங்கலில் திரைக்குவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.