சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

இது நம்ம லிஸ்டலையே இல்லையே.. பேருல மட்டும் இல்ல.. இனி தொட்டாலே வெற்றி தான்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. ஜெயம் ரவி முகத்தில் மட்டுமல்ல, இப்போதெல்லாம் அவர் வாழ்க்கையிலும் ஒரு ஒளி தெரிகிறது. விவாகரத்துக்கு பிறகு தன்னுடைய கேரியரை மட்டும் கவனித்து வருகிறார். பெண்களுக்கு பிடித்த சாக்லேட் பாயான இவர், நிஜ வாழ்க்கையிலும் அப்படி தான். எந்த சர்ச்சையில் சிக்காமல் கண்ணியமாக இருப்பார்.

ஆனால் இவர் மீதே இவருடைய மனைவி ஆர்த்திக்கு சந்தேகம். வீடியோ கால் செய்து, ரூமை சுற்றி காட்ட சொல்வது, அவரை எல்லா இடத்திலும் கண்காணிப்பது என்று நடந்துகொண்டுள்ளார். இருப்பினும் மனைவியின் மீது கொண்ட அதீத அன்பினால் எல்லாத்தையும் பொறுத்து கொண்டு போனார். ஆனால் சுயமரியாதை என்று ஒன்று இல்லாமல் போக, இதற்க்கு ஒன்றாக வாழ்ந்தால் சரி வராது என்று பிரிய முடிவு செய்தார்.

தற்போது விவாகரத்தும் கோரியுள்ளார். ஆனால் அவர் மனைவி ஆர்த்தியோ, நிழலின் அருமை வெய்யிலில் தான் தெரியும் என்பது போல, இப்போது தான் ஜெயம் ரவியின் அன்பும், அவரின் முக்கியத்துவமும் புரிந்து, விவாகரத்து செய்ய மறுக்கிறார். ஆனால் ஜெயம் ரவி விவாகரத்து முடிவில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. மேலும், அவர் தற்போதெல்லாம் ஞானியை போல பேசி வருகிறார்..

இனிமே வெற்றி மட்டும்தான்..

இந்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் பிசியாக இருக்கும் ஜெயம் ரவி, அடுத்ததாக வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆம். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “வெற்றிமாறன் சாரோட படம் பண்ணனும் ஆசை இருந்துச்சு. தைரியத்தை வர வச்சுட்டு அவரைச் சந்தித்து படம் பண்ணலாம் சார்னு கேட்டேன். எனக்கு இது இருக்கு, அது இருக்கு. எல்லாம் முடிச்சுட்டு வர்றேன். கண்டிப்பா நாம பண்ணலாம். அவருடைய கதை ஒன்னு கேக்கப்போறேன் கூடிய சீக்கிரம். கண்டிப்பா எங்க கூட்டணி நடக்கும் ” என்று confident ஆக பேசியுள்ளார்.

வெற்றிமாறன், ஜெயம் ரவி, பெயரே வெற்றியை குறிக்கிறது. இந்த காம்போ சூப்பராக இருக்கும், என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ஜெயம் ரவி அடுத்ததாக இயக்குனர் அவதாரமும் எடுக்க போகிறாராம்.

நடிகராக களம் கண்ட ஜெயம் ரவி தற்போது இயக்குநராக களமிறங்கவுள்ளார், அவரது முதல் பட ஹீரோ யார் தெரியுமா? ஜெயம் ரவி இயக்கவுள்ள முதல் படத்தின் ஹீரோ யோகி பாபு என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தி, எந்த அளவுக்கு உண்மை என்பது வரப்போகும் நாட்களில் தான் தெரியும்.

- Advertisement -

Trending News