ஜெயம் ரவி தன் ஆரம்ப காலங்களில் ரீ- மேக் ரவி என்று தான் பலரும் மறைமுகமாக அழைப்பர். அந்தளவுக்கு தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தெலுங்கு படங்களின் தமிழாக்கத்தில் நடித்து வந்தார். பின்னர் ரீமேக் படங்களில் நடிப்பதை நிறுத்தினார்.

jayam ravi
jayam ravi — mohan raja

இந்நிலையில் மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க இருக்கிறார் ஜெயம்ரவி.

பேபி

BABY

அக்ஷய் குமார் 2015-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட்டான படம் பேபி. சீக்ரெட் ஏஜென்ட், இன்டர்நேஷனல் ஸ்பை திரில்லர் வகை படம். நீரஜ் பாண்டே இயக்கினார். இந்த படத்தின் ரீமேக் உரிமையை இயக்குநர் அஹமத் பெற்றுள்ளதாக தெரிகிறது. இவர் இதற்கு முன் உதயநிதியை வைத்து மனிதன் படத்தை இயக்கினார்.

Director I. Ahmed Manithan Movie Working Stills

ஜெயம் ரவி அடங்கமறு படத்தை தொடர்ந்து, தன் அண்ணனின் படம் மற்றும் சுந்தர் சியின் சங்கமித்ராவில் நடிக்கவுள்ளார். அதன் பின் இப்படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும்.

thaana serntha

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படமும் அக்ஷய் குமார் நடித்த ஸ்பெஷல் 26 என்ற படம் தான். தற்பொழுது மீண்டும் ஒரு அக்ஷய் குமார் – நீரஜ் பாண்டேவின் படம் தமிழில் ரெடி ஆக போகிறது.