Connect with us
Cinemapettai

Cinemapettai

ahokselvan_cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அசோக் செல்வனின் அடுத்த பட தலைப்பை வெளியிட்ட ஜெயம் ரவி ! அட தலைப்பிலேயே இவ்வளவு விஷயமா – என அலசும் நெட்டிசன்கள் !

அசோக் செல்வன்

இவரது சினிமா வாழக்கை விறு விறுவென ஆரம்பித்தது, எனினும் எங்கு தவறு நடந்தது என்று தெரியவில்லை, இடையில் மனிதர்க்கு சிறிய காப் விழுந்துவிட்டது. இந்நிலையில் தற்பொழுது ஹீரோ சூப்பர் பிஸி. ஏற்கனவே ‘ஆக்சிஜன்’, ‘நெஞ்சமெல்லாம் காதல்’, ‘ஜாக் ’, என மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் புதிய படத்தின் அறிவிப்பு வந்துள்ளது.

ரெட் ரம்

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார். கன்னட நடிகை சம்யுக்தா ஹெகிடே ஹீரோயினாக நடிக்கிறார் (இதற்கு முன் ‘உன் சமையல் அறையில்’ நடித்திருந்தார்). விளம்பர பட உலைகளில் மிகவும் பிரபலமானவரான விக்ரம் சிறீதரன் படத்தை இயக்குகிறார்.

படத்தை பி.டி.ஆர்ட்ஸ், தமிழ் லைன் சினிமாஸ், தாமினி ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு. குகன் எஸ் பழனி ஒளிப்பதிவு. படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ளது.

படத்தின் தலைப்புடன் ஆங்கிலச் டாக் லைன் வைப்பது தான் ட்ரெண்ட். இப்படத்திலும் அதனை செவ்வனே செய்துள்ளார் படக்குழு. ரெட் ரம்மின் நிழலாக மர்டர் என்ற ஆங்கில வார்த்தை உள்ளது. மேலும் இங்கிலீஷில் ஐ திருப்பி போட்டால் வருகின்றது. ரெட் ரம் மற்றும் இரத்தத்தின் நிறமும் சிகப்பு தான்.

RED RUM

அடேங்கப்பா ஆக மொத்தத்தில் ரொமான்டிக் திரில்லர் வகையறா இப்படம் என்பது மட்டும் உறுதி ஆகியுள்ளது. விரைவில் மற்ற தகவல்கள் வெளி வரும் என எதிர்பார் கப்படுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top