JeyamRavi_KVAnandதனி ஒருவன், பூலோகம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான மிருதன் படமும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதைதொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி அடுத்ததாக கௌதம் மேனன், சுசீந்திரன், ஏ.எல். விஜய், பூலோகம் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் போன்ற 4 முன்னணி இயக்குனர்களுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதில் கௌதம் மேனன் படம் முதலில் தொடங்கவுள்ளது.