Connect with us

Cinemapettai

jayam-ravi-hit-movies

Cinema News | சினிமா செய்திகள்

ஜெயம் ரவிக்கு மிகபெரிய வெற்றி குடுத்த 5 படங்கள்..

ஜெயம் ரவி நடித்த நிறைய படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் குடுத்தாலும் மிகபெரிய வெற்றி பெற்ற படங்களை பற்றி பார்க்கலாம்.

ஜெயம்

ரவி நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான படம் ஜெயம். இப்படத்தின் மூலம் ஜெயம் ரவி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படத்தை அவரது சகோதரரான மோகன் ராஜா இப்படத்தை இயக்கினார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சதா அவர்கள் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி அவருக்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது. இப்படத்தின் மூலம் தான் இவருக்கு ஜெயம் ரவி என பெயர் கிடைத்தது.

jayam ravin

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி

ஜெயம் ரவி நடிப்பில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம் 2004ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அசின் நடித்திருப்பார் மற்றும் காமெடி கதாபாத்திரத்திற்கு விவேக் அவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார் இப்படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படமும் அவருக்கு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது.

jayam ravi m kumaran son ofmagalashimi

jayam ravi m kumaran son ofmagalashimi

சந்தோஷ் சுப்பிரமணியம்

ஜெயம் ரவி நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்தோஷ் சுப்பிரமணியம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்துள்ளார். இப்படம் ஒரு தந்தையின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து தான் நினைக்கும் செயல்களில் ஈடுபட முடியாமல் தவிக்கும் ஒரு இளைஞனின் கதாபாத்திரமாக இப்படம் கொண்டுள்ளது. இப்படமும் அவருக்கு அந்த ஆண்டு ஒரு சிறப்பான வெற்றியை தேடிக் கொடுத்தது.

jayam ravi santhose supuramani

jayam ravi santhose supuramani

பேராண்மை

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி 2009ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பேராண்மை. இப்படத்தில் இவருடன் 5 கதாநாயகிகள் நடித்துள்ளனர். ஜெயம் ரவி பழங்குடியினர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் இப்படத்தில் அவரது நடிப்புத் திறமையை நன்றாக நடித்திருப்பார். இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் இப்படத்திற்கு பெரும் பலத்தை சேர்த்து இப்படம் வெற்றி பெற்றது.

jayam ravi pearanmi

jayam ravi pearanmi

தனி ஒருவன்

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தனி ஒருவன். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது இவரது திரை வாழ்க்கையில் மிக முக்கியமான பங்கினை பெற்றது. இவரது சகோதரருக்கும் தனி ஒருவன் படம் திரைத்துறை வாழ்க்கையில் மிக முக்கியமான பங்கினை பெற்றது. தனி ஒருவன் படம் பல புதிய கருத்துக்களை கூறியது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top