மனைவி ஆர்த்தி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த ஜெயம் ரவி.. தடுமாறும் தனி ஒருவன்

Jayam Ravi: நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து அறிவிப்பு என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பழக்கம் ஆகிவிட்டது. இருவரும் மனம் ஒத்து பிரிக்கிறோம், பிள்ளைகளுக்கு சக பெற்றோராக எங்களுடைய கடமைகளை செய்வோம் இந்த அறிவிப்பை தான், தனுஷ்- ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜிவி பிரகாஷ்- சைந்தவி போன்ற தம்பதிகள் தெரிவித்திருந்தார்கள்.

ஆனால் ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவியின் விவாகரத்து அறிவிப்பு உள்ளே எக்கச்சக்க பிரச்சனை இருக்கிறது என்பதை கண்கூடாக காட்டியது. என் கணவர் என்னிடம் ஆலோசிக்காமல் விவாகரத்து அறிவிப்பை அறிவித்துவிட்டார்.

நானும் என் பிள்ளைகளும் அவருக்காக, அவருடன் வாழ்வதற்காக காத்திருக்கிறோம் என ஆர்த்தி ரவி சொல்லி இருந்தார். ஆர்த்தி ரவி அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஜெயம் ரவி குடும்ப நல நீதிமன்றத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து வாங்கித் தருமாறு மனு அளித்து விட்டார்.

காவல் நிலையத்தில் புகார் கொடுத்த ஜெயம் ரவி

இதுவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி தான். அதை தாண்டி ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தி மீது நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருப்பதாக நக்கீரன் பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது.

ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி, பிள்ளைகள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவர்களுடைய பங்களாவில் வசித்து வந்தார்கள். இந்த நிலையில் தான் ஜெயம் ரவி கோவா ட்ரிப் போனது, அதன் பின்னால் ஆர்த்தி தொடர்பை துண்டித்தது எல்லாம்.

இது போன்ற சமயத்தில் தான் ஜெயம் ரவி நீலாங்கரை வீட்டிலிருந்து தன்னுடைய உடமைகளை பெற்றுத் தருமாறு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருக்கிறார். ஏற்கனவே அவர்களுடைய விவாகரத்துக்கு பாப் பாடகி கெனிஷா பிரான்சிஸ் தான் என செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது.

போதாத குறைக்கு நானும் அவரும் சேர்ந்து வருங்காலத்தில் ஹீலிங் சென்டர் ஆரம்பிக்கப் போகிறோம் என ஜெயம் ரவி நேற்று சொன்னதெல்லாம் சகிக்க முடியாத கொடுமை. தன்னுடைய மனைவியை திருமணம் செய்ய பெற்றோர்கள் மறுத்தபோது ஜெயம் ரவி தன்னுடைய மணிக்கட்டு நரம்பை அறுத்துக் கொள்வேன் என மிரட்டினார் என்ற செய்தியை எல்லோருமே கேள்விப்பட்டிருப்போம்.

அப்படிப்பட்ட காதல் மனைவியிடம் இருந்து தன்னுடைய உடைமைகளை மீட்க காவல் நிலையம் வரை ஜெயம் ரவி சென்றது கஷ்ட காலம் தான். உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு இருந்த காதல் தற்போது காணாமல் போனது தான் நிதர்சனமான உண்மை.

- Advertisement -spot_img

Trending News