fbpx
Connect with us

Cinemapettai

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.. இணையத்தை தெறிக்கவிடும் பூமி பட சிங்கிள் லிரிக் வீடியோ

Videos | வீடியோக்கள்

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.. இணையத்தை தெறிக்கவிடும் பூமி பட சிங்கிள் லிரிக் வீடியோ

தமிழ் சினிமாவில் தற்போதைக்கு லாபகரமான நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. சமீபத்தில் வெளியான இவரது படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வருகின்றன.

கதை தேர்வில் மிகவும் கவனமாக செயல்படும் ஜெயம் ரவி அடுத்ததாக பூமி எனும் படத்தில் நடித்துள்ளார். மேலும் ஜெயம் ரவியின் 25வது படமாக இது உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லட்சுமண் இயக்கியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். மேலும் முதல் முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.

ஒரு சயின்டிஸ்ட் விவசாயத்தை காப்பதற்காக விவசாயியாக மாறி அவர்கள் படும் கஷ்டத்தையும் துன்பத்தையும் அரசியல் கலந்த சொல்லி உள்ளாராம்.

படத்தின் டிரைலர் வெளியாகும் போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பான நிலையில் தற்போது பூமி படத்திலிருந்து தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எனும் பாடல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ஹிந்தி திணிப்புக்கு எதிராக சமீபத்தில் இந்தி தெரியாது போடா என்ற வார்த்தை பரபரப்பை கிளப்பிய நிலையில் சரியான நேரத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது இந்த பாடல்.

மேலும் ஜெயம் ரவியின் பூமி படம் OTT ரிலீஸாக வெளிவர அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

லிரிக் வீடியோ:-

Continue Reading
To Top