இந்திய சினிமாவிற்கே புதிய ஜானர் படம் தான் ‘டிக் டிக் டிக்’. விண்வெளி சம்பந்தப்பட்ட படம். இப்படம் முதல் தமிழ் ’ஸ்பேஸ் திரில்லர்’ படமாக வெளியாகவிருக்கிறது.

எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப் .ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ஜபக்ஸ் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் வி.ஹித்தேஷ் ஜபக் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். டி.இமான் இசையமைக்க, ஜெயம் ரவி, நிவேதா பெதுராஜ், அர்ஜுனன், ரமேஷ் திலக், வின்செண்ட் அசோகன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆராவ் நடித்துள்ளார்.

ஏற்கனவே டீசர், ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் ஜனவரி 26 ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. அதற்க்கான டப்பிங் பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது. ஜெயம் ரவியின் மகன் ஆரவ் முதன்முறையாக ‘டிக் டிக் டிக்’ படத்திற்காக டப்பிங் பேசியுள்ளார்.


இதற்கு பதில் தரும் விதமாக இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் “இப்பவே அவர் சிறந்த ஆர்ட்டிஸ்ட் போல் உள்ளார்.” என்றார்.


பல பிரபலங்கள் இதனை ரீ ட்வீட் செய்கின்றனர். மேலும் பலரும் இந்த அப்பா மகனுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  வெளியானது சமந்தா நடிக்கும் ஹாரர் – த்ரில்லர் படம் - யூ டர்ன் பர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி !