டிக் டிக் டிக் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஜெயம் ரவி தனது அடுத்த படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

அடங்க மறு

அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ள படம் . இவர் இயக்குனர் சரணின் உதவியாளர் ஆவார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது இப்படம். இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

அதிகம் படித்தவை:  சமுத்திரிக்கனி ஹீரோவாகும் ‘சங்கத்தலைவன்’ : விசைத்தறி தொழிலை மையகப்படுத்தும் படம்.
Adangamaru

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ‘விக்ரம் வேதா’ படப் புகழ் சாம்.சி.எஸ். இசை அமைக்கிறார். ‘மாயா’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ முதலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ரூபன் கவனிக்கிறார். ஆர்ட் லால்குடி இளையராஜா.

Adangamaru

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

சுஜாதா விஜயகுமார், என்றால் சின்னத்திரையில் மிக பிரபலம். சீரியல் தயாரிப்பாளர். இவரின் மகளான ஆர்த்தியை தான் நம் ஜெயம் ரவி திருமணம் செய்துள்ளார். இவர்கள் தங்கள் ஹோம் மூவி மேக்கர்ஸ் பாணரில் இதற்க்கு முன் சுந்தர்.சி நடிப்பில் ‘வீராப்பு’ படத்தை தயாரித்துள்ளனர். மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின் சினிமா பக்கம் வந்துள்ளார்.