சக நடிகருடன் படுக்கையை பகிர்ந்தால் பிரச்சனை தான் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நச்சுன்னு நடிப்பதற்கு மட்டும் அல்ல மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வதற்கும் பெயர் போனவர். இதனாலேயே பலருக்கு அவரை பிடிக்காது.இந்நிலையில் கங்கனா சினிமா வாழ்க்கை பற்றி கூறியிருப்பதாவது,

ஆரம்ப காலத்தில் பல ஆண்கள் என் மீது கண் வைத்தனர். திருமணமானவர், திருமணமாகாதவர், வயதானவர், இளைஞர் என்று பல ஆண்கள் என்னுடன் இருக்க விரும்பினர்.

ஆண்களை நிராகரித்தால் அவர்கள் மோசமாக நடந்து கொள்வார்கள். இதனால் வேலை பார்க்கும் இடத்தில் சிக்கல் தான் ஏற்படும். அதுவும் உடன் பணியாற்றும் ஆணுடன் படுக்கையை பகிர்ந்தால் பிரச்சனையே. இது எந்த துறையாக இருந்தாலும் சரி.

நீங்கள் மிகவும் இளம் வயதில் திருமணமான ஆணின் கண்ணீர் கதையை நம்பக்கூடும். என் மனைவி என்னை அடிக்கிறாள் என்று கூறி கண்ணீர் விடுபவரை நம்புவோம்.

மகிழ்ச்சியான திருமணமான ஆணை நான் இதுவரை பார்த்தது இல்லை. 25 வயதிற்கு மேல் ஆண்களின் கண்ணீர் கதைகளை நம்புவது இல்லை. ஆனால் 15ல் இருந்து 25 வயதுக்குள் இருக்கும்போது ஒரு ஆண் மற்றொருவரின் கணவர் என்பதை மறந்து அவரை சிறந்த கணவராக நினைக்கக்கூடும் என்கிறார் கங்கனா.