அமைதியா இருக்கேன், சும்மா சும்மா சுரண்டி பாக்காதீங்க.! ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி கொடுத்த பதில்

கோலிவுட் வட்டாரத்தால் அதிகம் முனுமுனுக்கப்படும் வார்த்தையாக ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதியின் பெயர் மாறிவிட்டது. மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த நாளிலிருந்து இன்று வரை இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்த காரணம் இதுவாகத்தான் இருக்கும் என பலரும் பல கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

ஜெயம் ரவி யாருக்கும் தெரியாமல் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வரும் அதே வேளையில், அறிக்கை மேல் அறிக்கை வெளியிட்டு வருகிறார் ஆர்த்தி. இது தொடர்பாக ஆர்த்தி தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், என் வாழ்க்கையில் நடந்துவரும் விஷயங்கள் பற்றி என்னை சுற்றி உள்ள பலரும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நான் எதுவும் பேசாமல் மௌனம் காத்துவருவது எனது பலவீனத்தின் காரணமாகவோ, குற்ற உணர்ச்சியின் காரணமாகவோ அல்ல. நான் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளேன். “

“தெளிவாக சொல்ல வேண்டுமானால், எனது முந்தைய அறிவிப்பு தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது. ரவி வெளியிட்ட விவகாரத்து அறிவிப்பானது எனது ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டது என்றுதான் கூறினேன். அந்த விவகாரத்தைப் பற்றி எனக்கு தெரியாது என்று நான் கூறியதாக, என் வார்த்தைகள் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டுவிட்டது. இவை எனக்கு வருத்தமளிக்கிறது. இந்த விஷயத்தில் நான், ஜெயம் ரவியுடன் தனியாக கலந்துரையாட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.”

“நான் திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன். யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் பொது விவாதங்களில் நான் ஈடுபட மாட்டேன். எனது கவனம் எங்கள் குடும்பத்தின் நல்வாழ்வின் மேல் உள்ளது. இந்த விவகாரத்தில் கடவுளின் ஆசிர்வாதத்தை வேண்டுகிறேன்” எனக் கூறியுள்ளார். இவர் தற்போதுவெளியிட்டுள்ள இந்த மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

ஒருபக்கம் என்னவென்றால், ஜெயம் ரவி, பேச முயற்சிப்பவர், ஏன் இன்னும் பேச வரவில்லை என்று கேள்வி கேட்கிறார். மறுபக்கம் பேச வேண்டும், ஆனால் என்னிடம் அவர் பேச மறுக்கிறார் என்று சொல்கிறார். என்ன தான் இவர்களுக்குள் நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை. இதுவரை நடந்த விவகாரத்திற்கு மாறாக இவர்கள் விவாகரத்து இருப்பதால் இது அனைவருக்குமே அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக உள்ளது.

- Advertisement -spot_img

Trending News