இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி. தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்ற வாரம் சென்னைக்கு டெல்லி போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து வந்தபோது தினகரன் குறித்த பல்வேறு ரகசிய தகவல்களை டெல்லி போலீசாருக்கு பலரும் கொடுத்துள்ளனர்.

தினகரனுக்கு ஹவாலா ஏஜென்ட்டுகளாக யாரெல்லாம் செயல்பட்டனர், அவருடைய நெருங்கியநண்பர்கள் யார், ஜெயலலிதா மரணத்துக்குப்பின்னால் மறைந்துள்ள ரகசியங்கள் என்ன, அதில் சசிகலாவின் பங்கு என்ன, நடராஜன் ஏன் விலக்கி வைக்கப்பட்டார் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விலாவாரியாக அலசி, அது தொடர்புடைய ஆவணங்களையும் டெல்லி போலீசார் சேகரித்துச் சென்றிருக்கின்றனர்.

டெல்லியில் நடந்த விசாரணையின் போது, போலீசார் லாடம் கட்டியதில் தினகரன் உதவியாளர் ஜனார்த்தனும், அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் இவ்விவகாரத்தில் தொடர்புடைய பலரது பெயர்களை சொல்லி இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பப் பட்டிருக்கிறது. டெல்லியில் இருந்த சுகேஷ் சந்திராவுக்கு கேரளாவில் உள்ள தினகரன் ஆதரவு அமைச்சர் ஒருவரின் உறவினர் மூலமாக பணம் கைமாறி இருக்கிறது. இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனராம்.

அதிகம் படித்தவை:  ஊருக்கே உபதேசம் செய்யுது நடிகர் சங்கம், நிலம் ஆக்கிரமிப்பு செய்வது சரியா, பொதுமக்கள் கொந்தளிப்பு..!

கொச்சியிலிருந்து டெல்லிக்கு அமைச்சர் ஒருவரின் உறவினர் மூலம் பணம் அனுப்பப்பட்டதை உறுதி செய்த டெல்லி போலீசாருக்கு, சென்னையிலிருந்து கொச்சிக்கு பணத்தை கைமாற்றிய நெட்வர்க்கை பிடிப்பது சற்று சவாலாகவே அமைந்தது. விசாரணையின் போது போலீசாரின் காதுகளை அடிக்கடி எட்டிய பெயர் நரேந்திர ஜெயின் மற்றும் ஆதம்பாக்கம் மோகனரங்கம். நரேந்திர ஜெயின் சென்னை சவுக்கார் பேட்டையைச் சேர்ந்த ஹவாலா ஏஜென்ட் என்று கூறப்படுகிறது.

ஆதம்பாக்கம் மோகனரங்கம், வீட்டு வசதி வாரியத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இன்னும் ஒன்பது மாதங்கள் அவருக்கு சர்வீஸ் இருக்கிறது. அவர் மன்னார்குடியைச் சேர்ந்தவர். தினகரன் கட்சியின் துணை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட பிறகு பல வேலைகளுக்கு இவர் ஆலோசகராக செயல்பட்டுள்ளார். குறிப்பாக இன்னோவா புகழ் சம்பத்துக்கு வீடு வழங்கப்பட்டதில் இவரது சிபாரிசு ஸ்ட்ராங்காக    இருந்ததாம். இரட்டை இலை விவகாரத்தில் இவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாம். இது தொடர்பாக 16 பேருக்கு இதுவரை சம்மன் அனுப்பப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் சில நீதிபதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  ஓபிஎஸ் அணியின் பேச்சுவார்த்தை குழு கலைப்பு.. பா.ஜவுடன் இணைய பன்னீர் திட்டம்?

ஜெயலலிதா இறந்த பிறகு போயஸ் கார்டனில் இருந்து முக்கிய ஆவணங்கள் இரவோடு இரவாக வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாம். அவை என்ன ஆவணங்கள்?, யாரிடம் கொண்டு செல்லப்பட்டன? என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. இந்த ஆவணங்களை இடம் மாற்றியவர்கள் போயஸ் கார்டனில் வேலைப்பார்த்த ஒரு பெண்ணும், அதிமுக தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் அவரது கணவரும்தான் என்று கூறப்படுகிறது. அனைத்து ஆவணங்களும் சென்னை தி.நகரில் பிரம்மாண்ட துணிக்கடை மற்றும் நகைக்கடை வைத்திருக்கும் முக்கியப்புள்ளி ஒருவரின் லாக்கரில் சேர்க்கப்பட்டுள்ளதாம். அதனால் கூடிய விரைவில் அவரும் கைது செய்யப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த விவகாரங்களை திறமையாகக் கையாண்டதில் இளவரசியின் மகன் விவேக்கிற்கும் பெரும் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே அடுத்த இலக்கு விவேக் என்பது உறுதியாகியுள்ளது.